''அந்த நீர் யானையைத் தொட்டுப் பார்த்தேன்.... சுடுதுடா! ''
"அப்போ அது வெந்நீர் யானையா இருக்கும்!...''
- இசைவாணி, திருநெல்வேலி
"நான் சைக்கிளை வேகமா ஓட்டினேன்டா.... தலை சுத்திடிச்சு!...''
"ஆச்சரியமா இருக்கே!.... சைக்கிள் ஓட்டினா வீல்தானே சுத்தும்!....''
- டி.மோகன்தாஸ், நாகர்கோயில்
"ஒரு கூடையிலே 6 பழம் இருக்கு...., இன்னொரு கூடையிலே 5 பழம் இருக்கு...., இரண்டையும் ஒரு கூடையிலே கொட்டினா என்ன பழம் இருக்கும்?...''
"ஆரஞ்சுப் பழம் இருக்கும்!''
- தீ.அசோகன், திருவொற்றியூர்
"என்னடா இது?..... மளிகைக் கணக்கு, பால் கணக்கு, லாண்டரிக் கணக்கெல்லாம்... கணக்கு நோட்லே எழுதிகிட்டு வந்திருக்கியே!....''
"நீங்கதானே வீட்டுக்கணக்கை சரியா எழுதிக்கிட்டு வாங்கன்னு சொன்னீங்க?...''
- க.அருச்சுனன், செங்கல்பட்டு.
"செய்வினை..., செயப்பாட்டு வினை..., விளக்க முடியுமா?''
"வீட்டுப் பாடத்தை நானே செய்தால் அது செய்வினை!..... என் அப்பா செய்து ந்தால் அது செயப்பாட்டு வினை!...''
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
* "தானத்தில் சிறந்த தானம் எது?''
" நம்ம ஸ்கூல் விளையாட்டு மை தானம் சார்!...''
- துடுப்பதி வெங்கண்ணா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

