பிரிட்டிஷ் காலத்தில் வெளியான 2 அணா நாணயத்தில் காத்திருக்கு சர்ப்பிரைஸ்!

நாணயத்தை வெளியிட்டதென்னவோ பிரிட்டிஷ்காரர்கள் தான். ஆனால், அதில் அன்றைய ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவப் படமோ அல்லது பரங்கிச் சின்னமோ அல்லது விக்டோரியா ராணியின்முகமோ இல்லை.
பிரிட்டிஷ் காலத்தில் வெளியான 2 அணா நாணயத்தில் காத்திருக்கு சர்ப்பிரைஸ்!

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஏறத்தாழ 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டது. ஆரம்பத்தில் இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனியானது பின்னர் படிப்படியாக இந்திய அரசியல் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னுடைய பரங்கிக் குடையின் கீழ் கொண்டு வந்தது. இது எல்லோருக்கும் தெரிந்த கதை. இப்போது நீங்கள் தெரிந்துகொள்ளப் போவது பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் அவர்கள் வெளியிட்ட ஒரு இரண்டணா நாணயத்தைப் பற்றி;

நாணயத்தை வெளியிட்டதென்னவோ பிரிட்டிஷ்காரர்கள் தான். ஆனால், அதில் அன்றைய ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவப் படமோ அல்லது பரங்கிச் சின்னமோ அல்லது விக்டோரியா ராணியின்முகமோ பதிக்கப்படாமல்.. முகப்பில் ஸ்ரீராம பட்டாபிஷேகக் காட்சியும், பின்புறம் தாமரை மலரும் இடம்பெற்றிருக்கிறது.

1818ல் வெளியிடப்பட்ட 2 அணா நாணயத்தின் முகப்பு..

ஸ்ரீராம பட்டாபிஷேகம்
ஸ்ரீராம பட்டாபிஷேகம்

பின்புறம்..

கிழக்கிந்தியக் கம்பெனி பெயர் பொறித்த தாமரைச் சின்னம்
கிழக்கிந்தியக் கம்பெனி பெயர் பொறித்த தாமரைச் சின்னம்

இதை, இப்போது பார்க்குப் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது இல்லையா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com