377 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு!

செல்லிடப்பேசிகளிலும், கணினிகளிலும் எளிதில் ஆபாசப் படங்களையும், விடியோக்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடிவதால் அதைக் காணும் ஆண்கள் வரைமுறையின்றி பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை
porn sites banned
porn sites banned

நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டுமெனில் முதலில் இணையத்தில் எவ்வித பாதுகாப்பு நிபந்தனைகளும் இன்றி கொட்டிக் கிடக்கும் ஆபாச இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசுகையில் இணைய வசதி மூலம் செல்லிடப்பேசிகளிலும், கணினிகளிலும் எளிதில் ஆபாசப் படங்களையும், விடியோக்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடிவதால் அதைக் காணும் ஆண்கள் வரைமுறையின்றி பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை அனைவரையும் பாலியல் கண்ணோட்டத்துடனே அணுகுகின்றனர் இதில் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் மிகவும் கொடுமையானவை. தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாக சுமார் 5,951 புகார்கள் பதிவாகியுள்ளன. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் 17 வயதுக்குட்பட்ட 1 மில்லியன் பெண் குழந்தைகள் உடல் ரீதியிலான பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இப்படி நாளுக்கு நாள் பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. அந்தக் குற்றங்களை எல்லாம் களைந்து நமது குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு சமூகத்தை நாம் உருவாக்கியே ஆக வேண்டும்.

- என விஜிலா பேசினார்

அவர் பேசி முடித்ததும், மாநிலங்களவை உறுப்பினர்களில் பலர் அவரது கோரிக்கையை ஆதரிப்பதாக கூறினர்.

விஜிலாவைத் தொடர்ந்து பேசிய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இது தொடர்பாக சுமார் 50 எஃப் ஐ ஆர்கள் போடப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் சுமார் 377 இணையதளங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றை நீக்கும் உத்தரவும் இடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com