ஆன்லைன் காதலியைப் பார்க்க ஸ்விட்சர்லாந்து செல்லும் வழியில் பாகிஸ்தான் சிறையில் அடைபட்ட இளைஞர்!

பிரஷாந்த், விசாகரபட்டிணத்தில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு பெங்களூரில் பணி வாய்ப்பு கிடைத்து சென்றதாகவும் அங்கு ஸ்வப்னிகா என்ற பெண்ணைச் சந்தித்து காதல் வயப்பட்டதாகவும், அந்தப் பெண் திடீரென
Andhra Techie jailed in pakisthan
Andhra Techie jailed in pakisthan

ஹைதராபாத்: பாகிஸ்தானின் சோலிஸ்தானில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய பிரஜைகளில் ஒருவர் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக ஹைதராபாத் காவல்நிலையத்தில் அவர் தொடர்பான வழக்கு ஒன்று உள்ளதாகவும் இப்போது தெரிய வந்துள்ளது.

ஹைதராபாத்தை பூர்வீகமாகக்  கொண்ட மென்பொறியாளரான பிரசாந்த் வைந்தம், சரியான ஆவணங்கள் இல்லாமல் ராஜஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

பாகவல்பூர் மாவட்டத்திற்கு அருகிலுள்ள பாலைவனத்தில் நவம்பர் 14 ஆம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன.

பிரஷாந்த் தனது ஆன்லைன் காதலியான ஸ்வப்னிகாவைச் சந்திக்க கூகுள் மேப் உதவியுடன் சுவிட்சர்லாந்து செல்ல விரும்பினார், ஆனால், நடுவில் பாகிஸ்தானைக் கடக்கும் போது அத்துமீறி சட்டவிரோதமாக நுழைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அவரைக் கைது செய்ததாக பாகிஸ்தான் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் எப்படி பாகிஸ்தானில் இறங்கினார் என்பதைக் கண்டுபிடிக்க பாகிஸ்தான் போலீசார் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், பிரஷாந்த் தனது பெற்றோருக்காகப் பேசி வெளியிட்ட வீடியோ செய்தி ஒன்று திங்கள்கிழமை பிற்பகுதியில் வைரலாகியது. அதில் தெலுங்கில் பேசிய பிரஷாந்த், ஒரு மாதத்திற்குள் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவேன் எனத் தான் நம்புவதாகப் பெற்றோரிடம் கூறினார்.

பிரஷாந்த் பேசிய விடியோ..

"மம்மி மற்றும் டாடி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்னால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் இப்போது என்னை காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். இங்கு விசாரணை முடிந்ததும் மீண்டும் அவர்கள் என்னை சிறைக்கு அழைத்துச் செல்வார்கள், அங்கிருந்து இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிப்பார்கள். பின்னர் அங்கிருந்து தூதரகம் வாயிலாக என்னால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும். 

- என்று தன்னைக் காணாமல் தவிக்கும் தனது பெற்றோருக்கான செய்தியைப் பதிவு செய்துள்ளார் பிரஷாந்த்.

இதிலிருந்து தெலுங்கில் பேச பாகிஸ்தான் காவல்துறை அதிகாரிகளிடம் பிரஷாந்த் அனுமதி பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

மேலும் அந்த விடியோவில் பேசுகையில், ‘இப்போது நான் சிறைக்கு அனுப்பப்பட்ட பின்பு, ஜாமீன் செயல்முறை தொடங்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் கைதிகளை பரிமாறிக்கொள்ளும் அதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது’ என்றும் பிரஷாந்த் தெரிவித்துள்ளார்.

அந்த விடியோவில் அவர் எப்போது, எப்படி பாகிஸ்தானுக்குள் நுழைந்தார் என்பது குறித்த தகவல்கள் எதையும் சொல்லவில்லை.

பிரஷாந்தின் தந்தை தெலுங்கு ஊடகங்களுக்கு நேர்காணல் அளிக்கையில் தெரிவித்த தகவலின் படி;

பிரஷாந்த், விசாகரபட்டிணத்தில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு பெங்களூரில் பணி வாய்ப்பு கிடைத்து சென்றதாகவும் அங்கு ஸ்வப்னிகா என்ற பெண்ணைச் சந்தித்து காதல் வயப்பட்டதாகவும், அந்தப் பெண் திடீரென ஸ்விட்சர்லாந்தில் வேலை கிடைத்து சென்றுவிட அவரைச் சந்திக்கவே பிரஷாந்த் கூகுள் மேப் உதவியுடன் ஸ்விஸ் செல்ல முயன்றதாகவும் தெரிவித்தார். மகனின் காதல் குறித்து அவர் காணாமல் போன பிறகு இப்போது அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவைப் பார்த்த பிறகே தனக்குத் தெரிய வந்திருப்பதாகவும். அடிப்படையில் தன் மகன் மிகவும் நல்லவர் என்றும் அவரிடம் தேச விரோதப் போக்கெல்லாம் எதுவும் இல்லை என்றும் பிரஷாந்தின் தந்தை ஊடகங்களில் பதிவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com