பட்டப்பகலில் நாய் வேட்டைக்கு வந்த சிறுத்தை!

சிறுத்தையொன்று மாடியேறி வந்து அங்கு வீட்டுக்காவலுக்காக வெளியில் மிதியடியின் மேல் படுத்துறங்கும் வளர்ப்பு நாயை நின்று நிதானமாக பதுங்கிப் பாய்ந்து வேட்டையாடுவதைக் காணும்போது அச்சத்தில் உறைகிறது மனம்.
cheetah trying to hunt pet dogs
cheetah trying to hunt pet dogs
Published on
Updated on
1 min read

நீலகிரி மாநிலம் கோத்தகிரியில் பட்டப்பகலில் சிறுத்தையொன்று நாய்களை வேட்டையாட வந்த விடியோ ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. வீடு இருந்த பகுதி காட்டை ஒட்டிய பகுதி என்பதால் அங்கு சிறுத்தை மட்டுமல்ல கரடி, காட்டெருமை போன்ற விலங்குகளின் ஆதிக்கமும் இருப்பது வாடிக்கை தானாம். ஆனாலும், சிறுத்தை பதுங்கிப் பதுங்கி வேட்டையாட முயல்வதைக் காணும்போது நெஞ்சுக்குள் பனிக்கத்தியைச் சொருகிய உணர்வு தான்.

அந்த விடியோவை இந்த விடியோ இன்னும் பதற வைக்கிறது.

சிறுத்தையொன்று மாடியேறி வந்து அங்கு வீட்டுக்காவலுக்காக வெளியில் மிதியடியின் மேல் படுத்துறங்கும் வளர்ப்பு நாயை நின்று நிதானமாக பதுங்கிப் பாய்ந்து வேட்டையாடுவதைக் காணும்போது அச்சத்தில் உறைகிறது மனம்.

காட்டுப்பகுதியை ஒட்டி வீடு கட்டிக் கொண்டு வாழ்பவர்கள் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும்.  

மேற்கண்ட விடியோக்கள் யூடியூபில் காணக்கிடைக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com