ஹோட்டலுக்கு சாப்பிடப்போன குழந்தையைப் போய் ‘திகிலூட்டும் குழந்தை’ ன்னு சொன்னா கோவம் வரனுமா? கூடாதா?!

என் குழந்தை எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அதைப் பற்றி நீ மூச்சு விடக்கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் டூ மச்சாகத்தான் தெரிகிறது.
family with terrifying kid food bill
family with terrifying kid food bill

வார இறுதி விடுமுறையில ஆஸ்திரேலியால ஒரு அம்மா, தன் குழந்தை, கணவர்ன்னு குடும்பத்தோட ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்காங்க. அங்க என்ன நடந்ததோ தெரியல, ஃபுட் ஆர்டர் பண்ணிட்டு ஏதோ ஒரு சந்தேகத்துல பில் வாங்கிப் பார்த்திருக்காங்க. நாம ஆர்டர் பண்ணதை விட எக்ஸ்ட்ராவா எதையாவது பில் பண்ணியிருக்காங்களோன்னு ஒரு சின்ன சந்தேகத்துல அவங்க பில் வாங்கிப் பார்க்க, அதுல பில் தொகையைக் காட்டிலும் இவங்களைக் கோபத்துல கொந்தளிக்கச் செய்ய இன்னொரு விஷயம் இருந்திருக்கு. அது என்னன்னா? வாரக் கடைசி விடுமுறை நாளாச்சேன்னு குழந்தையோட ஹோட்டல் போயிருந்தாங்க இல்லையா? அது குழந்தைக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டும், வெளி உலகத்தைப் பார்த்து சில விஷயங்கள் கத்துக்கட்டும்னு தான். அப்படித்தானே நிறைய பேரண்ட்ஸ் தங்களோட குழந்தைங்களை வெளியில கூட்டிட்டுப் போறது வழக்கம். அப்படித்தான் இவங்களும் கூட்டிட்டுப் போயிருக்காங்க. ஆனா, அது அந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு பிடிக்கலை போல. ஏன்னா? குழந்தைங்க ஏதாவது குறும்பு பண்ணி வச்சா தங்களுக்குத்தான் இரட்டிப்பு வேலைன்னு நினைச்சிட்டாங்களோ என்னவோ? அதனால அவங்க என்ன பண்ணியிருக்காங்கன்னா, வேடிக்கை பண்றதா நினைச்சு இந்தம்மா உட்கார்ந்திருந்த டேபிள் பேரையோ இல்லை இவங்க பெயரையோ பில்லுல குறிப்பிடாம... A Family with terrifying kid' ன்னு குறிப்பிட்டு பில் ரெடி பண்ணிட்டாங்க. இப்ப இந்த இடத்துல இதை வாசிக்கற நாம ஒவ்வொருத்தரும் அந்த இடத்துல நம்மள வச்சு கற்பனை பண்ணிப் பாருங்களேன்.

நாம, நம்ம குழந்தைங்களோட சாப்பிட ஒரு ஹோட்டலுக்குப் போறோம். அங்க நமக்கும் இதே மாதிரி ஒரு அனுபவம் நேர்ந்தா நாம என்ன செஞ்சிருப்போம்.

ஹோட்டல் ஊழியர்களைத் திட்டிட்டு.. அதை அவங்களோட மேலதிகாரி கிட்டவும் புகாரா பதிவு பண்ணிட்டுத்தான் நகர்வோம். சிலர் இந்த ரகம்.

சிலர் ஒன்னுமே பேசாம அப்படியே ஆர்டர் பண்ண ஃபுட்டை கேன்சல் பண்ணிட்டு ஹோட்டலை விட்டு வெளியேறிட்டு பிறகு தங்களோட மனக்குமுறலை ஃபேஸ்ஃபுக், ட்விட்டர்ன்னு பதிவு செய்வாங்க.

நான் மேல குறிப்பிட்ட ஆஸ்திரேலிய அம்மணி. இந்த ரெண்டு விஷயத்தையுமே பண்ணிட்டாங்க.

ஆமாம், ஹோட்டல் ஊழியர்களையும் வார்ன் பண்ணிட்டு, ஆர்டர் பண்னா சாப்பாட்டையும் புறக்கணிச்சிட்டு, புகாரையும் பதிவு பண்ணிட்டு சோஷியல் மீடியாலயும் அதைப் பதிவு பண்ணிட்டாங்க.

பின்ன என்ன? அழகா துள்ளி விளையாடுற குட்டிப் பாப்பாக்களைப் போய் ‘A Fam with terrifying Kid' ன்னு ஹோட்டல்காரங்க பில்லுல குறிப்பிட்டா கோவம் வருமா? வராதா? நீங்களே சொல்லுங்களேன்.

வாசிப்பவர்களுக்கு இது ஒரு வேடிக்கைச் செய்தியாகத் தோன்றலாம்.

ஆனால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குழந்தையை ஹோட்டல் ஊழியர்கள் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது தான்.

ஆனால், அந்த ஊழியர்களின் கஷ்டங்களையும் நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

அதற்குத்தான் பில்லில் போட்டுத் தீட்டி விடுகிறார்களே?! 

என்கிறீர்களா?

நான் ஹோட்டல் அதிபர்களின் கஷ்டத்தைப் பற்றிப் பேசவில்லை. ஹோட்டலில் பரிசாரகர்களாக இருக்கிறார்களே அவர்களது கஷ்டத்தைப்பற்றிச் சொன்னேன்.

நம் வீட்டுக் குழந்தை சேட்டைக்காரக் குழந்தைகள் என்றால் ஹோட்டல், தியேட்டர், ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்லும் முன் அங்கெல்லாம் குறைந்தபட்ச கட்டுப்பாடாவது தேவை என்பதை உணர்த்தியே அழைத்துச் செல்ல வேண்டும்.

என் குழந்தை எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அதைப் பற்றி நீ மூச்சு விடக்கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் டூ மச்சாகத்தான் தெரிகிறது.

சும்மா இருக்கும் குழந்தையை டெர்ரிஃபையிங் கிட் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன வந்தது ஹோட்டல் ஊழியர்களுக்கு?

அவர்களுக்குத் தேவை கஸ்டமர்கள் தான் இல்லையா?

வேண்டி விரும்பி அவர்களுடனான உறவை சீர்கெட வைத்துக் கொள்வார்களா? என்ன? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com