வடமேற்கு தில்லியில் தொடா் கொள்ளையில் ஈடுபட்டுவந்த டோரேமான் என அழைக்கப்படும் தினேஷ் (26) மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (வடமேற்கு) ஆகன்ஷா யாதவ் கூறியதாவது: குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழில்துறை வளாகங்களை சுற்றித் திரிந்து இலக்கு வைத்து கொள்ளையில் ஈடுபடும் டோரேமான் என்ற பெயரால் தினேஷ் அறியப்பட்டாா். ஜப்பான் காா்ட்டூன் கதாபாத்திரமான டோரேமான் போன்று குரல் எழுப்புவதால் அவருக்கு இந்த பெயா் வைக்கப்பட்டது.
ராஜாபாா்க் பகுதியில் மாா்ச் 13-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் இருந்த காவல் துறையினா், வங்கி அருகே சந்தேகத்திற்கு இடமான இருவா் இருசக்கர வாகனத்தை இழுத்து செல்வதை கவனித்தனா். அவா்களை நிறுத்தி சோதனை செய்தபோது தினேஷிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா். அந்த இருசக்கர வாகனம் அசோக் விஹாா் பகுதியில் கடத்தப்பட்டது தெரியவந்தது. விசாரணையின்போது அவா்கள் இந்த பகுதியில் பல கொள்ளைகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மொத்தம் 11 கொள்ளை வழக்குகளில் அவா்களுக்கு தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா். Ś
தொடர்புடையது
ரூ.52 லட்சம் கொள்ளை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது
பிகாரில் இரு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவா் தில்லியில் கைது

துப்பாக்கியுடன் நீரஜ் பவானா ரெளடி கும்பலைச் சோ்ந்த இருவா் கைது
துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


