Enable Javscript for better performance
Dear Tamil Citizens! Here is the list of Top Ten Tictok Stars Of Tamil!- Dinamani

சுடச்சுட

  

  அன்பார்ந்த தமிழ் குடிமக்களே! தமிழின் டாப் டென் டிக்டாக் சூப்பர் ஸ்டார்கள் இவங்க தான்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 31st October 2019 02:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  top_ten_tik_tok_stars_list

  tik tok super stars

   

  நீங்கள் ஒரு டிக் டாக் ரசிகரா? அல்லது நீங்களே ஒரு டிக் டாக் புரட்சியாளரா? ஐ மீன் டிக் டாக் விடியோக்கள் வெளியிடுவதில் ஆர்வமுள்ளவரா? என்று கேட்டேன்.. அந்த மல்ட்டி ஃப்ளெக்ஸ் மாலில் என்னருகில் நின்று கொண்டு கையிலிருந்த ஸ்மார்ட் ஃபோனில் டிக் டாக் விடியோக்களை ஸ்கிரால் செய்து கொண்டிருந்த இளம்பெண் சற்றே திடுக்கிட்டு என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு ... சற்று இடைவெளி விட்டு ஒரு அந்நியச் சிரிப்புடன் புருவம் சுளித்து... ஏன் நானும் பண்ணுவேனே! என்றவாறு அப்பால் நகர்ந்தார்.

  எனக்குச் சிரிப்பு வந்தது. அந்தப் பெண்ணை கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். யாருக்காக அந்த லெளஞ்சில் காத்திருக்கிறாள் என்று தெரியாது. ஆனால், காத்திருக்கும் நேரம் முழுக்க டிக் டாக்கில் தான் இருந்தாள். 

  தனக்குத் தானே சிரித்துக் கொண்டும், அடிக்கடி மைல்டாக முக பாவனைகளை மாற்றியவாறு அந்தப் பெண் டிக் டாக் விடியோக்களில் மூழ்கி இருந்ததைப் பார்க்கையில் இப்போது சுனாமியே வந்தாலும் இவள் கவனத்தில் அது பதியாது போலிருக்கிறதே என்று தோன்றியது எனக்கு. அவளது கவனத்தைக் கலைக்கும் விதமாகவே நான் அப்படிக் கேட்டுப் பார்த்தேன்.

  அந்தக் கேள்வியும் கூட அவளுக்கு தொந்திரவாகவே இருந்திருக்கும். அதனால் தான் அப்பால் நகர்ந்து விட்டாள். அவள் மட்டுமல்ல. இன்று எண்ணற்ற இளம்பெண்களும், இளைஞர்களும் இப்படித்தான் சமூக ஊடக மயக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

  சரி அப்படி என்ன தான் இருக்கிறது இந்த டிக் டாக்கில் என்று தேடத் துவங்கினால் அதிலும் சூப்பர் ஸ்டார்கள் லிஸ்ட் காட்டியது கூகுள்.. 

  பாருங்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.. அந்த டிக் டாக் சூப்பர் ஸ்டார்களின் யாரெல்லாம்? அவர்களது விடியோக்களில் அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று? 

  முக்கால்வாசியும் சும்மா பொழுது போக்கு விடியோக்கள் தான். சினிமாப்பாடல்களுக்கு வாயசைப்பதும், நடிப்பதும், முக பாவனைகள் காட்டுவதுமாக எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களது மன அழுத்தமும், தனிமையும் தீர்ந்தால் சரி. வேறு வினைகளை எல்லாம் இழுத்துக் கொள்ளாமல் இருந்தால் நல்லது.

   

  1. டெவில் குயின் 

  டெவில் குயின் இரட்டைச் சகோதரிகள்..

  1.6 மில்லியன் ஃபாலோயர்கள் இவரைப் பின் தொடர்கிறார்கள்.

   

   

  இந்த டிக்டாக் கணக்கானது அம்ரிதா & அமலா எனும் இரட்டைச் சகோதரிகளால் உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவருமே இன்னும் பள்ளிச் சிறுமிகள் தான். மூத்தவர் 12 ஆம் வகுப்பும் இளையவர் 10 ஆம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவர்களுடைய சம வயதுடைய ஃபாலோயர்களால் இன்று தமிழின் நம்பர் ஒன் டிக் டாக் ஸ்டார்களாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் இந்தச் சகோதரிகள் தமிழர்கள் அல்ல, பிறப்பால் மலையாளிகளான இவர்கள் டிக் டாக் விடியோ வெளியிடுவதெல்லாம் தமிழில் தான். 

  2. அனிதா ... 

  அனிதா..

  1.5 மில்லியன் ஃபாலோயர்களுடன் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றிருக்கும் இந்த டிக் டாக் ஸ்டார் அடிப்படையில் விவசாயக் கல்லூரி மாணவியாக இருந்த போதும் தமிழ் குறும்படங்களிலும், ஆல்பம் விடியோக்களிலும் நடிப்பதில் பெரும் ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

   

  இவருக்கு இதுவரையிலும் 10ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் வாய்த்துள்ளனர். இந்தப் பெண்ணுக்கு ஃபோட்டோகிராபி என்றால் மிக இஷ்டம் என்றும் சொல்கிறார்கள்.

  3. காயத்ரி ஷான்...

  காயத்ரி ஷான்

  1.4 மில்லியன் ஃபாலோயர்களுடன் டிக் டாக்கில் இயங்கிக் கொண்டிருக்கும் காயத்ரி ஷான் இலங்கைத் தமிழ்ப் பெண்.

   

  தற்போது ஸ்ரீலங்காவில் வசிக்கும் காயத்ரி அங்கு தொலைக்காட்சித் தொடர்களிலும் ஆல்பம் விடியோக்களிலும் நடித்து வருவதாகத் தகவல். டிக் டாக்கின் அழகான பெண்களில் காயத்ரி தான் டாப்பாம்.

  4. ஹசல் ஷைனி..

  ஹசல் ஷைனி..

  1.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஹசல் ஷைனி வசிப்பது சென்னையில். டான்ஸரான ஹசலுக்கு 19 வயது தான் ஆகிறது.

   

  டிக் டாக் முயற்சிகளில் எக்ஸ்பிரஸன் குயின் என்று புகழப்படும் ஹசலுக்கு கோலிவுட் கனவும் உண்டு. தற்போது தமிழ் குறும்படங்களில் நடித்து வருகிறார்.

  5. ராஜ் ப்ரியன்...

  ராஜ் ப்ரியன்

  டாப் டென் லிஸ்டில் இதுவரை ஒரு ஆண் முகம் கூட காணோமே என்று தேடக்கூடியவர்களுக்கு இதோ வந்து சிக்கியிருக்கிறார் ராஜ் ப்ரியன். 1 மில்லியன் ஃபாலோயர்களுடன் டாப் டென் லிஸ்டில் இடம்பெறும் ராஜ் ப்ரியன் மதுரைக்காரர், தற்போது பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார்.

   

  யூடியூபில் லுங்கி பாய்ஸ் டீம் என்றொரு சேனல் வைத்திருக்கிறார். தமிழ் குறும்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

  6. சிந்துஜா..

  சிந்துஜா..

  960.4 ஆயிரம் ஃபாலோயர்களுடன் லிஸ்டில் அடுத்த இடம் பெறுகிறார் சிந்துஜா. இவரும் சென்னைக்காரர் தான். மாடலான சிந்துஜா, தற்போது அனைத்து டிக் டாக் ஸ்டார்களைப் போலவே தானும் குறும்படங்களிலும், பாப் ஆல்பங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் பெரிய திரைக்கு வரும் எண்ணமும் இருக்கிறது.

  7. விஷ்ணு உன்னிகிருஷ்ணன்..

  விஷ்ணு உன்னி கிருஷ்ணன்

  900 ஆயிரம் ஃபாலோயர்களுடன் பட்டியலில் இணைந்திருக்கும் விஷ்ணு உன்னி கிருஷ்ணனை நீங்கள் விஜய் தொலைக்காட்சித் தொடர்கள் சிலவற்றில் பார்த்திருக்கலாம். அங்கிருந்து விலகிய நிலையில் தற்போது ஜீ தமிழில் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

  8. மாபு கிரஷ்...

  மாபு கிரஷ்

  661.6 ஆயிரம் ஃபாலோயர்களுடன் மாபு பட்டியலில் 8 ஆம் இடம் பிடித்திருக்கிறார். மற்ற டிக் டாக் ஸ்டார்களைப் போலவே இவரும் தமிழ் குறும்படங்கள், விளம்பரங்கள் என்று தொடங்கி கோலிவுட்டில் வெற்றிகரமாக நுழைவதையே தனது விருப்பமாகக் கொண்டிருக்கிறார்.

  9. அக்‌ஷய் கமல்..

  அக்‌ஷய் கமல்

  463.9 ஆயிரம் ஃபாலோயர்களுடன் பட்டியலில் 9 ஆம் இடத்திலிருக்கும் அக்‌ஷய் கமல் விஜய் தொலைக்காட்சியின் ‘ராஜா, ராணி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அக்‌ஷய் ஒரு பொறியியல் பட்டதாரி. ஆயினும் டிக் டாக் உலகில் பெண்களுக்கு இணையாக எக்ஸ்பிரஸனில் கலக்கி வரும் இவருக்கு எக்ஸ்பிரஸன் கிங் என்ற பட்டப் பெயர் கூட உண்டாம்.

  10. ராகுல் வர்மா..

  ராகுல் வர்மா..

  டாப் டென்னில் கடைசி இடம் இவருக்குத்தான். சென்னையைச் சேர்ந்த ராகுல் விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர். மாணவராக இருந்த போதும் தமிழ்நாடு முழுதும் பல பள்ளிகள் மற்றும் கல்லூரி விழாக்களுக்குத் தலமை விருந்தினராகக் கலந்து கொண்டு கலக்கும் வகையில் மிகச்சிறந்த நடனத்திறமையும், நடிப்புத் திறனும் கொண்டவர் என்கிறார்கள். எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே என்பது போல இந்தப் பையனும் தமிழ் குறும்படங்களில் நடித்து வருகிறார். அடுத்து என்ன? அப்படியே கோலிவுட் தான்.

  இவங்க தான் 2019 ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் டாப் டென் டிக் டாக் சூப்பர் ஸ்டார்கள். 

  இவர்களைப் பின் தொடர்வதும். இவர்கள் செய்யும் விடியோக்களைப் பார்த்து தாங்களும் அப்படியே டிக் டாக் விடியோக்கள் உருவாக்க முயற்சிப்பதுமாக பல இளைஞர், இளைஞிகள் இன்று நம்மிடையே உலவிக் கொண்டிருக்கின்றனர்.

  நடுத்தர வயதினர் பலருக்கு இப்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாவெல்லாம் போரடிக்கத் தொடங்கி விட்டதாகக் கேள்வி. மின்சார ரயில், பேருந்து, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் என எங்காயினும் சரி காத்திருக்கும் மக்களின் ஒரே குதூகலம் டிக் டாக் என்பதாக இன்று காலம் மாறி விட்டது.

  டிக் டாக்கால் பல்வேறு விபரீதங்களும் நிகழ்வதாகப் பல செய்திகள் வெளிவந்தாலும் கூட மக்களின் டிக் டாக் ஆர்வம் தணியவில்லை.

  சமூக ஊடகங்களில் ஒன்றான டிக் டாக் மீதான மோகத்தை ஆரோக்யமானதாகக் கருத வாய்ப்பில்லை.

  நடிப்புத் துறையில் நுழையும் விருப்பமுள்ளவர்களுக்கு வேண்டுமானால் இது பயன் தரலாம். ஆனால், எண்ணற்ற இல்லத்தரசிகள், அலுவலகங்களில் பணி புரியும் மகளிர், ஏன் பள்ளி குழந்தைகளைக் கூட பங்கேற்க வைத்து பலர் டிக் டாக் விடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அம்மாதிரியான முயற்சிகள் எல்லாம் விபரீதங்களுக்கு வழிவகுக்கக் கூடியவை என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை.

  Image courtesy: allReviewers.com

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai