அக்டோபர் 11.. அப்பாக்களின் இளவரசிகளே! இன்று உங்களுக்கான கொண்டாட்ட நாள்!

நாம் யாரை தேவதைகள் என கொண்டாடுகிறோமோ? அவர்கள் மீது தான் மேலும் மேலுமென சுமைகளை ஏற்றிக் கொண்டே செல்கிறோம். அந்தச் சுமைகளைக் குறைப்பது எப்படி? அவர்களை பட்டாம் பூச்சிகளாக சுற்றிப் பறந்தாட அனுமதிப்பது
girl force: unscriptable, unstoppable!
girl force: unscriptable, unstoppable!

அக்டோபர் 11.. அப்பாக்களின் இளவரசிகளே! இன்று உங்களுக்கான கொண்டாட்ட நாள்!

2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்கீட்டின் படி உலகம் முழுவதுமாக 62 மில்லியன் பெண்களுக்கு இன்றளவும் கூட அடிப்படை கல்வி பெறுவதற்கான வசதிகள் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு கணக்கீடு என்ன சொல்கிறது என்றால்? 5 முதல் 14 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் தங்களது வாழ்நாளில் 160 மில்லியன் (1,135,92,80,000) மணி நேரங்களை பெரும்பாலும் வீட்டு வேலைகளுக்காகவே செலவிடுகிறார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு கல்வி கற்கவோ, புதிதாக ஆராய்ச்சிகளில் இறங்கவோ ஏன் விளையாட்டு மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடக்கூட நேரமிருப்பதில்லை. சுருங்கச் சொல்வதென்றால் அந்த நேரங்களில் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுமென்றாலும் கூட அதைப் புறக்கணித்து விட்டு வீட்டு வேலைகளில் உழன்று கொண்டிருக்கும் பெண் குழந்தைகள் இங்கு அதிகம் பேர் இருக்கிறார்கள் என்கிறது. அதே சமயம் இந்தப்பக்கம் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் என்று எடுத்துக் கொண்டீர்களெனில் அவர்களது வாழ்க்கை முறையானது பெண் குழந்தைகளின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. அவர்களுக்கு விளையாடுவதும், கல்வி கற்றலுமே முக்கியப் பணிகளாக ஒதுக்கப்படுகின்றன. 

அதுமட்டுமல்ல, உலகம் முழுக்க நிகழ்த்தப்பட்ட சர்வே ஒன்றில் தெரிய வந்த உண்மை. உலக அளவில் 4 ல் ஒரு பெண்ணாவது 18 வயதுக்கு முன்பே திருமணமானவராக இருக்கிறார். மனமுதிர்ச்சியற்ற சிறுமிப் பருவத்தில் நிகழும் கட்டாயக் குழந்தைத் திருமணங்களில் மனைவி என்ற பெயரில் அந்தச் சிறுமி பாலியல் ரீதியாகக் கட்டாயப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறாள். இப்படியான பாலியல் வன்முறைகளில் குற்றவாளியாகக் கருதப்படும் வயது வந்த ஆண்களுக்கு தண்டனை எதுவுமே பெற்றுத்தர முடிவதில்லை. இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும். அதற்காகவாவது சர்வ தேச அளவில் பெண் குழந்தைகளுக்கென்று பிரத்யேக நாள் ஒன்றை கொண்டாட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் ஐக்கிய நாடுகளுக்கான பெண்கள் நல்லெண்ணத் தூதர் எம்மா வாட்ஸன்.

இப்படி தினம் தினம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மட்டுமல்லாமல், அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது என்ன நடக்கக்கூடும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச பெண்கள் தினம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, சிறுமிகளுக்கு கட்டாயக் கல்வி பெற்றுத்தருதல், குழந்தைத் திருமண விகிதங்களை முற்றிலுமாகக் குறைப்பது, பெண் குழந்தைகளைத் தாக்கும் நோய் வீதத்தைக் குறைப்பது போன்ற திட்டமிடல்களுக்கு சர்வ தேச பெண்கள் தினம் உதவுகிறது அதுமட்டுமல்ல அதிக ஊதியம் பெறும் வேலைகளை அணுக பெண்களுக்கு உதவுவதன் மூலம் பெண்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தவும் இந்த குறிப்பிட்ட தினத்திற்கான நோக்கங்கள் வலுப்பெறுகின்றன.

அந்த வகையில் உலக பெண்குழந்தைகளுக்கான தினமாக அக்டோபர் 11 அனுசரிக்கப்படுவது

நாம் யாரை தேவதைகள் என கொண்டாடுகிறோமோ? அவர்கள் மீது தான் மேலும் மேலுமென சுமைகளை ஏற்றிக் கொண்டே செல்கிறோம். அந்தச் சுமைகளைக் குறைப்பது எப்படி? அவர்களை பட்டாம் பூச்சிகளாக சுற்றிப் பறந்தாட அனுமதிப்பது எப்போது? அதற்கான விடைகளைத் தேடத்தான் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுமதிக்கப்படுகிறது.

இன்று சிலர் கூறலாம்;

பெண் சிசுக் கொடுமை எல்லாம் முன்னொரு காலத்தில் இருந்தது. இப்போது அதை ஒழித்து விட்டோம் என்று. அது உண்மையல்ல. 

இன்றும் கூட நம் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையின் பேசுபொருட்களில் ‘பெண் சிசுக் கொலை’ யும் ஒன்றாகப் பேணப்பட்டு வருகிறது.

அந்தக் கொடுமைகள் எல்லாம் களையப்பட வேண்டுமென்றால் பெண் குழந்தைகளின் பிரச்னைகளைப் பேச தனியாக ஒரு அமைப்பு வேண்டும். உலகப் பெண்குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்ட அதற்கென ஒரு மையக்கருதுகோள் வேண்டும். அப்படித் துவங்கியது தான் சர்வ தேச பெண் குழந்தைகளுக்கென ஒரு தினம். 2012 ஆம் ஆண்டு முதல் கொண்டாட்டத்திற்கு உரிய நாளாக அனுசரிக்கப்பட்டு வரும் இந்த நாளானது ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு விதமான மையக் கருதுகோள்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டுக்கான கருதுகோள் (தீம்)

இந்த ஆண்டுக்கான தீம் (கருப்பொருள்) "GirlForce: Unscripted and Unstoppable".(தடுத்து நிறுத்தப்பட முடியாததும், பதிவு செய்யப்பட முடியாததுமான மகளிர் சக்தி) என்று அர்த்தம் தரும் இந்த கருதுகோளானது பெண்ணெனும் மகா சக்தியின் பல்வேறு பரிமாணங்களை உலகம் முழுதுணர்த்தி பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உலக அரங்கில் நிலை நாட்டப் புறப்பட்டிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com