பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க அசாம் முதல்வரின் புதிய முயற்சி!

பாஜகவின் ஜன் ஆசிர்வாத யாத்திரை தொடர்பாக..

முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

Published On :19 மார்ச் 2026, 12:31 pm IST

அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேகியாஜுலியில் இருந்து பாஜகவின் ஜன் ஆசிர்வாத யாத்திரையை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடங்கிவைத்தார்.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஈடுபட்டுள்ளார். அந்தவகையில், பாஜகவின் ஜன் ஆசிர்வாத யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலக் கட்சித் தலைவர் திலீப் சைகியா, மத்திய அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா மற்றும் பிற உயர்மட்டத் தலைவர்களுடன், யாத்திரை ஊர்வலத்தில் பங்கேற்றார்.

சாலைகளின் இருபுறமும் மக்கள் வரிசையாக நின்று, பூக்கள் தூவி முதல்வரை வரவேற்றனர். யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பு தேகியாஜுலியில் உள்ள குப்தேஸ்வரி கோயிலில் முதல்வர் வழிபாடு மேற்கொண்டார்.

யாத்திரை முதல் நாளில் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கும்.

மாநிலம் முழுவதும் மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்காகக் கட்சி இந்த யாத்திரையைத் தொடங்கியுள்ளது என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மார்ச் 9 வரை தொடரும் இந்த யாத்திரையின் மூலம் தினமும் சுமார் ஒரு லட்சம் மக்களுடன் இணைவதே யாத்திரையின் நோக்கமாகும். இந்த யாத்திரையின் மூலம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட முயற்சிகள் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும். அதே நேரத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குக் குடிமக்களின் ஆசிர்வாதங்களையும் பெறுவோம் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Summary

Assam Chief Minister Himanta Biswa Sarma on Saturday launched the state BJP's 'Jan Ashirwad Yatra' from Dhekiajuli in Sonitpur district as the party seeks a third straight term in the upcoming Assembly polls.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.