எங்க அப்பா M.A, B.L, ஆனா பொண்ணுங்க எல்லோருமே 4 வது தாண்டலை, நான் அந்தத் தடையை உடைச்சேன்! 

எங்க வீட்ல சர்வண்ட்ஸ் இல்ல மிஸ், என் ட்ரெஸ் எல்லாம் ரொம்ப அழுக்காயிட்டா எங்கம்மா தான் கஷ்டப்பட்டு துவைக்கனும். அவங்க கை வலிக்கும்ல, எங்கம்மா பாவம், அதான் நான் என் ட்ரெஸ்ஸை அழுக்குப் பண்ணிக்காம
எங்க அப்பா M.A, B.L, ஆனா பொண்ணுங்க எல்லோருமே 4 வது தாண்டலை, நான் அந்தத் தடையை உடைச்சேன்! 

இயக்குனர் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேல். ஒரு பள்ளி ஆசிரியை, நாவலாசிரியை, பள்ளித் தாளாளர் என அஷ்டாவதானியாகத் திகழும் அவர் தனது மகனின் சமீபத்திய வெற்றிகரமான படைப்புக்குப் பின் ஊடகப் பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் சுவாரஸ்யமானவை. அவற்றிலிருந்து சில துளிகள் இங்கே நம் வாசகர்களுக்காக;

எங்க வீட்ல எங்க அப்பா M.A, B.L ஆனா எங்கம்மாவும் வீட்ல இருக்கற மத்த பெண்களும் 4 வது 5 வதைத் தாண்டலை. இந்த வழக்கத்தை நான் உடைக்கனும்னு நினைச்சேன். ஆனாலும், எங்க குடும்பத்துல கட்டுப்பாடு அதிகம்கறதால எனக்கு ஸ்கூல் முடிச்சதுமே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. ஆனாலும், நான் விடல, என் கணவர் கிட்ட, நான் மேல படிக்கனும், என்னை ஒரு டிகிரி ஹோல்டர் ஆக்குங்கன்னு கேட்டுக்கிட்டேன். அவரும் அதை ஏத்துக்கிட்டு என்னைப் படிக்க வச்சாரு. முதல் குழந்தை பிறந்தப்போ BA படிச்சேன். அடுத்தடுத்து MA, B.Ed, M,Phil படிச்சேன். ஆனா, அதையெல்லாம் முடிக்க முடியாம போயிடுச்சு. இப்போ வேல் யூனிவர்சிட்டில P.hd பண்ணிட்டு இருக்கேன். என்னைப் பொருத்தவரைக்கும் கடமையைச் செய், அப்புறமா உரிமையை கேள், கிடைக்கலன்ன அடிச்சுக் கூட கேள்! அவ்ளோ தான்.

பெண்கள் கல்வி கற்பது, ஆண்களுக்கு இணையாக வேலைக்குப் போதல் பற்றிய ஒரு கேள்விக்கு அவரது பதில், பெண்கள் வேலைக்குப் போகலன்னா இன்னிக்கு யாரு மதிக்கிறாங்க, ஆனா, படிச்ச படிப்பை கர்வத்தோடு வெளிப்படுத்தும் போது தான் அது யாருக்கும் பிடிக்கறதில்லை. எல்லாக் குடும்பங்களிலும் ஆம்பளை ஒரு ஆள் சம்பாதித்து வீடு, கார், ஆடம்பர பொருட்கள் எல்லாம் வாங்கி விட முடியாது. பெண்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து கடமையைச் செய்து விட்டு பிறகு உரிமையைக் கேட்டு வாங்கலாம். 

அம்மா மேகலா மீது மகன் வெற்றிமாறனுக்கு இருந்த பாசத்தைப் பற்றியதொரு கேள்விக்கான பதில்;

அவன் எல் கே ஜி படிச்சிட்டிருக்கும் போது ஈவினிங் ப்ளே டைம் விடுவாங்க இல்லையா? அப்போ இவன் மட்டும் மத்த பசங்க கூட விளையாடாம அங்க சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருப்பான். அப்போ, அதைத் தொடர்ந்து பார்த்துக்கிட்டே இருந்த அவனோட டீச்சர் ஒருத்தங்க, அவன்கிட்ட போய், ‘நீயும் இறங்கி வந்து விளையாடேன்... ஏன் சும்மா நின்னு வேடிக்கை பார்த்துட்டே இருக்கே?’ ன்னு கேட்டிருக்காங்க, 

அதுக்கு வெற்றி சொன்ன பதில்;

‘எங்க வீட்ல சர்வண்ட்ஸ் இல்ல மிஸ், என் ட்ரெஸ் எல்லாம் ரொம்ப அழுக்காயிட்டா எங்கம்மா தான் கஷ்டப்பட்டு துவைக்கனும். அவங்க கை வலிக்கும்ல, எங்கம்மா பாவம், அதான் நான் என் ட்ரெஸ்ஸை அழுக்குப் பண்ணிக்காம இருக்கேன்’ ன்னு சொல்லிருக்கான். 

அதைக்கேட்டுட்டு அந்த டீச்சர் என்னைப் பார்க்கும் போது என் கிட்ட சொன்னாங்க;

என்னங்க இது, உங்க பையன் உங்களுக்காக கோயில் கட்டுவான் போல இருக்கேன்னு சிரிச்சாங்க.

எம்பையனுக்கு எம்மேல அவ்ளோ பாசம்.

என்கிறார் திருமதி மேகலா சித்ரவேல்.

இன்றைய குழந்தை வளர்ப்பு பற்றியதொரு கேள்விக்கு;

நாங்கள்லாம் அந்தக்காலத்துல கவிதை மாதிரி குழந்தைகளை வளர்த்தோம். ஸ்கூல்க்குப் போகும் போது எம் பையன இடுப்புல தூக்கிப்பேன், எம்பொண்ணு நடந்து கூடவே வருவா, போகும் போதே அவகிட்ட, அன்னைக்கு என்ன டெஸ்ட் இருக்கோ, அதுல இருந்து கேள்விகள் கேட்டுக்கிட்டே வருவேன், அவ பதில் சொல்லிக்கிட்டே வருவா... எழுதற டெஸ்ட்ல 100/100 மார்க் வாங்கிடுவா. இன்னைக்கு அப்படி நடந்து யாரு ஸ்கூல்க்கு போறாங்க, பல குழந்தைங்க ஸ்கூல் வேன், கார்ன்னு தான் போறாங்க. இன்னைக்கு காலமே மாறிட்டுது. இதையும் தப்புன்னு சொல்ல முடியாது. ஆனா, பாருங்க இன்னைக்கு குழந்தைங்க கையில எல்லாம் மொபைல் போன் தான் இருக்கு. அதைப்பார்த்துக்கிட்டே தான் சாப்பிடனும்கிறாங்க. அவங்கள ரொம்பவும் கண்டிக்கவும் முடியல. காலையில 7 மணிக்கெல்லாம் ஸ்கூல்க்கு கிளம்பற குழந்தையோட சின்ன ஆசைதானேன்னு அவங்க விருப்பத்துக்கு ஒத்துக்கிட வேண்டியதா இருக்கு. அது தப்பு தான். ஆனா, அது தப்புன்னு தெரிஞ்சும் இன்னைக்கு நாம அதை அனுமதிக்கிறோமேன்னு தான் இருக்கு. என்ன செய்யறதுன்னு தான் தெரியல.

-என்கிறார்.

தமிழ் திரையுலகிற்கு அற்புதமானதொரு இயக்குனரைப் பெற்றுத் தந்தவர் என்ற வகையில் மேகலா சித்ரவேல் அவர்களது அனுபவப் பகிரல்கள் அனைத்துமே அருமையானவையாகவே இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com