நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தேர்தலில் தனித்துப் போட்டியிட காங்கிரஸுக்கு தைரியமில்லை: குஷ்பு சவால்

பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடட்டும் என்று பாஜக தலைவர் குஷ்பு சவால் விடுத்துள்ளது பற்றி...

News image

பாஜக தலைவர் குஷ்பு - விடியோ க்ளிப்

Updated On :28 பிப்ரவரி 2026, 1:02 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடட்டும் என்று பாஜக தலைவர் குஷ்பு சவால் விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு பேசுகையில், காங்கிரஸை பொருத்தவரையில், தனித்து நிற்க அவர்களுக்கு தகுதியோ தைரியமோ கிடையாது. திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்; மறுபுறம் விஜய்யிடமும் (தவெக) பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

யாரிடமிருந்து அதிக லாபம் வருகிறதோ அவர்களிடம் சென்று விடுவார்கள். யார் அதிக தொகுதிகளும் ஆட்சியிலும் பங்கு தருகிறார்களோ அவர்களிடம் சென்று விடுவார்கள். இனிவரும் காலங்களில், அவர்களால் நிச்சயமாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வெறும் 4 மாநிலங்களில் மட்டும்தான் அவர்கள் ஆட்சி செய்கின்றனர்.

இப்போது ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திமுகவிடம் கேட்கின்றனர். ஆனால், ஆட்சியில் பங்கு தர மாட்டோம் என்று முதல்வர் சொல்லி விட்டார்.

ஆகையால், அவர்கள் கேட்பதை யார் கொடுக்கிறார்களோ அவர்களிடம் சென்று விடுவார்கள். காங்கிரஸ் எந்தப் பக்கம் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்து விடும். முடிந்தால் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள் என்று தெரிவித்தார்.

Summary

Congress has no guts to go alone in Tamil Nadu polls, says BJP leader Kushboo

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.