உங்க கிட்ட 10 பேனா இருக்கலாம்.. ஆனா, அதுல ஒரே ஒரு பேனாவாச்சும் சுதேசிப் பேனாவா இருக்கா?

பேனா இண்டஸ்ட்ரியில் எவையெல்லாம் சுதேசி அல்லது இந்தியன் மேட் பேனாக்கள், எவையெல்லாம் அந்நிய நிறுவன பேனாக்கள் என்று தெரியுமா உங்களுக்கு?
உங்க கிட்ட 10 பேனா இருக்கலாம்.. ஆனா, அதுல ஒரே ஒரு பேனாவாச்சும் சுதேசிப் பேனாவா இருக்கா?

இன்றைய செய்தித்தாள் வாசித்தீர்களா? அதில் ஜெர்மானியப் பிரதர் ஏஞ்சலா மெர்கல், இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு குறித்த செய்தியை யாரும் தவற விட்டிருக்க வாய்ப்பில்லை. அதில் மெர்கலை தமது இல்லத்திற்கு அளித்து சிறப்புச் செய்த மோடி, அவருக்கு சில பொருட்களைப் பரிசளித்தார். அவை, இந்தியாவில் முதன்முதலில் தயாரான ’ரத்னம்’ சுதேசிப் பேனா, மற்றொன்று லடாக்கில் இருந்து தயாரான கதர் சால்வை ஒன்று. இந்த இரண்டு பொருட்களையும் தமது அன்புப் பரிசாக ஜெர்மானியப் பிரதமருக்கு அளித்திருக்கிறார் மோடி. தலைவர்கள் பிற தலைவர்களுக்கு அளிக்கும் பரிசுப் பொருட்கள் எப்போதுமே தனிச்சிறப்பானவை. அந்த விதத்தில் பிரதமர் மோடி அளித்த பரிசுகளில் ‘ரத்னம்; சுதேசிப் பேனா பற்றித் தெரிந்து கொள்வோமே!

அதற்கு முன்பு நமக்குத் தெரிய வேண்டியது ஒன்றுண்டு. இன்று சந்தையில் ஏராளமான பேனாக்கள் வந்து விட்டன. அவற்றில் யூஸ் அண்ட் த்ரோ என்று சொல்லப்படக்கூடிய ஒரே முறை மட்டுமே பயன்படுத்தி விட்டு தூக்கி எறியக்கூடிய பேனாக்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த போதும் பவுண்டன் பேனாக்களுக்கு இருக்கும் மவுசும் என்றுமே குறைந்ததில்லை.

சரி அத்தகைய பேனா இண்டஸ்ட்ரியில் எவையெல்லாம் சுதேசி அல்லது இந்தியன் மேட் பேனாக்கள், எவையெல்லாம் அந்நிய நிறுவன பேனாக்கள் என்று தெரியுமா உங்களுக்கு?

அதெல்லாம் தெரிந்தா நாம் இதுவரை பேனாக்கள் வாங்கிக் கொண்டிருந்தோம் என்கிறீர்களா?

இனிமேலாவது வாங்க முயற்சிக்கலாமே... குறைந்த பட்சம் ஒருவரிடம் பத்துப் பேனாக்கள் இருக்கிறதென வைத்துக் கொள்ளுங்கள், அதில் ஒன்றாவது சுதேசிப் பேனாவாக இருந்தால் நல்லது தானே?

இந்தியாவில் தயாரிக்கப்படும் சுதேசிப் பேனாக்கள்...

ரத்னம், கேமல், கிஞ்சன், ஷார்ப், செல்லோ, நட்ராஜ், அம்பாசடர், லின்க், மான்டெக்ஸ், ஸ்டீக், சங்கீதா, லக்ஸர் உள்ளிட்ட பிராண்டுகள் அனைத்தும் இந்தியத் தயாரிப்புகள்

அந்நிய நிறுவனத் தயாரிப்பு பேனாக்கள்... 

பார்கர், நிக்கல்சன், ரோட்டோமாக், ஸ்விஸ்சயர், ஆட் ஜெல், ரைடர், மிட்ஸுபிசி, ஃப்ளெய்ர், யூனிபால், பைலட், ரோல்கோல்ட் போன்றவை ஃபாரின் மேக்குகள்.

இப்போது சொல்லுங்கள், நம்மிடம் பத்து பவுண்டன் பேனாக்கள் இருந்தாலும் அதில் ஒரே ஒரு பேனாவேனும் சுதேசிப் பேனாவாக இருந்தால் அதிலொரு சந்தோஷம் கிடைக்குமா? இல்லையா?

ஏனெனில் இந்த சுதேசி என்ற வார்த்தைக்கு ரத்தமும், சதையுமான நமது இந்திய சுதந்திரப் போராட்ட காலத்துடன் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவில் இருந்து விரட்ட அந்நியப் பொருட்களை ஒரு மனதாகப் பகிஷ்கரிக்க நினைத்தவர்கள் நாம்.

இன்று அந்தப் பிரச்னைகளெல்லாம் தேவையற்றவை. உலகமே ஒரு குளோபல் கிராமமாகி விட்டது. இன்றைய தேதிக்கு நாம் அந்நியப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று ஒற்றைக்காலில் நிற்கத் தேவையில்லை. ஆனாலும், இந்தியாவில் தயாராகும் பொருட்களின் பால் சற்று அதிக ஆர்வத்துடனும், கரிசனத்துடனும் இருக்க முயற்சிப்பதில் தவறேதும் இருக்க முடியாது. தரத்தில் எவ்வித  காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாத இந்திய நிறுவனங்கள், சுதேசி நிறுவனங்கள் நிறைய இருக்கலாம். அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து தரமான பொருட்களை வாங்குவது ஒவ்வொரு இந்தியரின் கடமையாக வேண்டும்.

மேடம் மெர்கலுக்கு சுதேசிப் பேனாவை பரிசளித்து இத்தனை நினைவுகளைக் கிளறி விட்ட பிரதமர் மோடிக்கு நன்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com