தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிறையில் கைதி மீது தாக்குதல்: போலீஸார் 4 பேர் சஸ்பென்ட்!

திருவனந்தபுரத்தில் காவல் விசாரணையில் கைதி தாக்கப்பட்டதாக 4 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

News image

சிறையில் கைதி மீது தாக்குதல் - சித்திரிப்பு

Updated On :28 பிப்ரவரி 2026, 11:05 am

கேரளத்தில் காவல் விசாரணையில் கைதி தாக்கப்பட்டதாக 4 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருவனந்தபுரத்தில் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜீனு பேபி என்பவர், சிறையில் இருந்தபோது அவர் மீது உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார், காவல் அதிகாரிகளான சுனில், சிஜுகுமார், கிரிஷ் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, கோட்டை உதவி ஆணையர் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தியதில், ஜீனு மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் நால்வரையும் பணியிடை நீக்கம் செய்து உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

பைக் திருட்டு வழக்கில் கொச்சியில் கைது செய்யப்பட்டு, திருவனந்தபுரத்துக்கு அழைத்து வரும் வழியில் போலீஸ் வாகனத்துக்குள் வைத்தும், சிறையில் படுத்திருந்தபோதும் ஜீனுவின் தலைமுடியை இழுத்து போலீஸார் தாக்குதல் நடத்தியதாகவும் விசாரணை தெரிய வந்தது.

மேலும், ஜீனு கொச்சியில் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவரை திருவனந்தபுரத்தில் கைது செய்ததாக போலி ஆவணங்கள் தயாரித்ததற்காக 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீஸாரின் தாக்குதலால், ஜீனுவின் சிறுநீரகங்கள் மற்றும் தசைகளில் காயம் ஏற்பட்டு, அவருக்கு அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஜீனு, தற்போது திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Four police officers suspended over custodial torture in Thiruvananthapuram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.