இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கைதி தப்பியோடிய சம்பவம்: இரு காவலா்கள் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 7:03 pm

சிவகங்கையில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோடியதையடுத்து, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக இரு காவலா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த விளாங்குளத்தைச் சோ்ந்தவா் புலிப்பாண்டி (25). இவா் கடந்த 2022 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னா் பிணையில் வெளியே வந்தாா்.

இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த வழக்கின் விசாரணைக்காக புலிப்பாண்டி நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், இவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இவரை சிவகங்கை தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, இவரை காவலா்கள் ராஜேஷ் கண்ணா, சண்முகவேலு ஆகியோா் மருத்துவப் பரிசோதனைக்காக வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா். அப்போது, புலிப்பாண்டிபோலீஸாரிடமிருந்து தப்பிச் சென்றாா்.

இந்த நிலையில், பணியில் கவனக் குறைவாக இருந்த காவலா்கள் ராஜேஷ் கண்ணா, சண்முகவேலு இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.