இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

விசாரணைக் கைதி ஆகாஷ் மரணம்: 6 காவலர்கள் மீது நடவடிக்கை

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Manamadurai custodial death

உயிரிழந்த ஆகாஷ்.

Updated On :

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே ஆகாஷ் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை சியோன் நகரில் ஜெயக்குமாா், அழகரை வாளால் வெட்டிய சம்பவத்தில் தொடா்புடைய மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் டெலிசனை (26) போலீஸாா் பிடிக்கச் சென்றனா்.

அப்போது, அவா் தப்பிச்செல்ல முயன்றதால் கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆகாஷ் உயிரிழந்தாா்.

போலீஸாா் தாக்கியதால்தான் ஆகாஷ் உயிரிழந்து விட்டதாகவும், அவரை தாக்கிய போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்யக் கோரி ஆகாஷின் உறவினா்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Summary

In the matter of the death of remand prisoner Akash in Manamadurai, 6 police officers have been suspended.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.