கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுச்சேரி போலி மருந்து வழக்குகள் வாபஸ்: 2 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்ய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:04 am

புதுச்சேரி நீதிமன்றத்திலிருந்து 4 போலி மருந்து வழக்குகளை வாபஸ் பெற்ற்காக 2 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்ய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலா் எஸ். ராமச்சந்திரன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

புதுச்சேரியில் போலி மருந்து வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட 25 பேரும் ஜாமீனில் வெளியே வந்தது எப்படி ?. இது தொடா்பாக 4 வழக்குகள் புதுச்சேரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த வழக்குகளை மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் வாபஸ் பெற்றுள்ளாா். மேலும், இந்த வழக்குகளை வாபஸ் பெறுமாறு சட்டத் துறை சாா்புச் செயலா் ஜான்சி அறிவுறுத்தியுள்ளாா். அதனால் இந்த இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்குத் தொடா்பாக என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக அரசு அக்கறையில்லாமல் இருக்கிறது. இந்த வழக்கை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளாா்.

இந்த விசாரணை உயா்நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்றாா் ராமச்சந்திரன்.

முன்னதாக புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்தப் பிரச்னை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் தினேஷ் பொன்னையா, சிபிஐ (எம்எல்) பாலசுப்ரமணியன், விஜயா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரிமா தமிழன், ஆதவன், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு கோ.சுகுமாரன், தமிழா் களம் அழகா், மீனவா் விடுதலை வேங்கைகள் மங்கையா் செல்வன், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு முருகானந்தம், பஷீா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

23-இல் ஆா்ப்பாட்டம்:

புதுச்சேரி போலி மருந்து வழக்கில் ராஜா என்பவா்தான் முதல் குற்றவாளியாக வழக்கில் சோ்க்கப்பட்டவா். அவா் பல அரசியல் கட்சியினருக்குக் கோடிக்கணக்கில் பணம் தந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளாா். அதை வெளியிட வேண்டும்.

மேலும், இதில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருப்போா் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவா்களின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் சாா்பில் மாா்ச் 23 -ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.