குட்டி யானை மோயோவின் வினோத பழக்கம்!

மோயோ ஒரு யானைக்குட்டி. பிறந்து சில தினங்கள்தான். வெள்ளம் திரண்ட ஒரு நதியை, தன் கூட்டத்தோடு கடந்து சென்ற போது வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டது.
குட்டி யானை மோயோவின் வினோத பழக்கம்!

முக நூலிலிருந்து....

மோயோ ஒரு யானைக்குட்டி. பிறந்து சில தினங்கள்தான். வெள்ளம் திரண்ட ஒரு நதியை, தன் கூட்டத்தோடு கடந்து சென்ற போது வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டது. கழுதைப் புலிகள் அதைச் சுற்றி வளைத்துக் கொண்டன. மரணத்திலிருந்து யானைக் குட்டியைக் காப்பாற்றினாள் ராக்ஸி எனும் வனவிலங்கு காப்பாளர். சாவின் பிடியிலிருந்து தன்னைக் காப்பாற்றியவரை தூக்கத்தில் கூட பிரிய முடியவில்லை யானைக் குட்டியால். புத்த மதத்தில் இப்படி எல்லாவற்றின்மீதும் அன்பு செலுத்துவதற்கு 'மைத்ரி மனநிலை' என்று பெயர்.

- இந்திரன் ராஜேந்திரன்

காட்டில் குயில்கள் மட்டுமே 
பாட வேண்டுமென்றால்...
காடு நிசப்தமாகிவிடும்.
- சுந்தரபுத்தன்

விழிப்பதற்கே உறக்கம்,
வெல்வதற்கே தோல்வி,
எழுவதற்கே வீழ்ச்சி,
வாழ்வதற்கே வாழ்க்கை.
- மாரியப்பன்

சுட்டுரையிலிருந்து...

காது குத்தியதற்கான
அடையாளம் இருக்கிறது...
ஆனால் வலி மறந்து விட்டது. 
முதுகில் குத்தியதற்கான 
அடையாளம் இல்லை...
ஆனால் வலி 
மறப்பதேயில்லை. 
- சுரேன்

கார் கண்ணாடி என்ன 
குடும்ப அட்டையா? 
சவ சவன்னு குடும்பத்தில இருக்கிற
அத்தனை பேரையும் 
எழுதி வச்சிருக்கீங்க?
- கோழியின் கிறுக்கல்

யார் உதைத்தாலும்
இலக்கை நோக்கி ஓடும்
கால்பந்தை போல இருக்க
வேண்டும் Goal
- தமிழினி

வேவு பார்க்கும் 
விண்மீன் 
திருடர்களைக் கண்டு,
அலையலையாய்க்
குரைக்கிறது,
நிலங் காக்கக் 
கட்டிப்போடப்பட்ட
கடல் நாய்.
- லக்ஷ்மிவ்வா

வலைதளத்திலிருந்து...

மழை நாட்களில் எனக்குத் தேவை மழையைத் தவிர வேறு எதுவுமில்லை. மழையில் நனைந்து, மழையை ருசித்து மழையில் திளைத்து, மழையில் காய்ச்சல் ஏற்பட்டு, மழையினாலே சரியாகி, என மழைக்கும் எனக்கும் நெடுங்காலமாய் அழியாக் காதல் இருந்துவருகிறது. பொழிந்து கொண்டிருக்கும் மழையை எவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது எனக்கு. சில நாட்களாய் மழை பொய்த்துவிட்டதே என நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை அது தன் வேலையைச் செய்து ஈரத்தை உறுதிப்படுத்திவிட்டது. வேடிக்கை பார்க்கையில் நனைதல் பிடிக்கும், நனைந்து கிடக்கும்போது வேடிக்கையின் நினைவுகள் ஞாபகத்தைக் கிளர்த்தும், இப்படியான சுழற்சிதானே வாழ்க்கை? நான் ஒரு இறகுதான்... அதன் முன்? 

கண்ணில் நிறைந்தும் நிறையாத மழைக்காட்சிகள் ஜன்னலில் தெறிக்கும் சாரலுடன் தெரியும் இருண்ட கருமேகங்கள், தூரத்து ரயில், பக்கத்து வீட்டு சிட் அவுட்டில் சிறகை உதிர்த்தபடி உடலை சிலிர்த்துக் கொள்ளும் அண்டங்காக்கை, உள்ளேன் அய்யா என்று மழைக்காலத்தில் தன் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் தவளைகள்...

ஸ்விட்ச் போட்டால் எரியும் விளக்கைப் போல இயற்கைக்கு எதாவது ஸ்விட்ச் இருந்தால், விரும்பும் போது பொழியவும் வேண்டாமெனில் அமர்த்திக் கொள்ளவும் வகையிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் இயற்கையுடன் எப்போதும் போராடிக் கொண்டிருந்து தோல்வியில் முடிந்து போகும் வாழ்க்கைதானே நிஜம்? இயற்கையை வணங்கி, போற்றி அதில் கரைந்து அதில் கலந்துவிட்டால் இயற்கை பெரும் கருணை காட்டும். பெய் எனப் பெய்யும் மழை நில் என நிற்கும் மழை.
http://umashakthi.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com