இந்திய சேனல்கள் நமது கலாசாரத்தை குட்டிச்சுவராக்குகின்றன, நம்மூரில் அவற்றை அனுமதிக்காதீர்கள் பாக் தலைமை நீதிபதி காட்டம்!

இத்தனைக்கும் ஃபிலிமாசியா சேனல் ஒன்றும் அரசியல் செய்திச் சேனல் அல்ல, அது ஒரு பொழுதுபோக்குச் சேனல் எனும் போது அதற்கேற்றாற் போலான கண்டெண்டுகள் தானே அதில் வடிவமைக்கப் படக்கூடும். இதிலென்ன பிரச்சார உத்தி 
இந்திய சேனல்கள் நமது கலாசாரத்தை குட்டிச்சுவராக்குகின்றன, நம்மூரில் அவற்றை அனுமதிக்காதீர்கள் பாக் தலைமை நீதிபதி காட்டம்!

இப்படிச் சொல்வது யார் தெரியுமா? பாகிஸ்தான் தலைமை நீதிபதி சாஹிப் நிஸார். நேற்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கொன்றில் அவர் வெளியிட்ட தீர்ப்பின் சாராம்சம் இவ்விதமாக இருந்தது.

இந்திய சேனல்கள் பல பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டு வெளிவருகின்றன. அவற்றில் சிலவற்றைத் தடை செய்யுமாறு பாக் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தடையை எதிர்த்து பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ரெகுலேட்டரி அதாரிட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதற்கான பதிலைத்தான் நேற்று பாக் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நிஸார் இப்படித் தெரிவித்திருக்கிறார்.

நீதிமன்றத் தடையை எதிர்த்து பாகிஸ்தானில் இந்திய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரும்பும் பெம்ரா (Pemra) அமைப்பின் இயக்குனர் சலீம் பெய்க் கூறுவதென்னவென்றால் பாகிஸ்தானில் ஒளிபரப்பாகி வரும் ஃபிலிமாசியா சேனலின் 65 சதவிகித நிகழ்ச்சிகள் அந்நிய மொழிகளிலிருந்து சப்ஸ்கிரைப் செய்யப்படக்கூடியவையே. இந்த சதவிகிதமானது படிப்படியாக உயர்ந்து தற்போது 80 சதவிகிதம் என்ற நிலையை வந்தடைந்திருக்கிறது. பாகிஸ்தானில் இப்படி இந்திய சேனல்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறப்பதை எப்படி அங்கீகரிப்பது என்பதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்விதமாக எச்சரித்துள்ளார். ஆயினும் இந்தத் தடையை எதிர்த்து நாங்கள் மேல் முறையீடு செய்வது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

ஆயினும் தலைமை நீதிபதி தன் உத்தரவில் இந்திய நிகழ்ச்சிகளுக்கான தடையை மிகக்கடுமையாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் இருக்கிறார். இத்தனைக்கும் ஃபிலிமாசியா சேனல் ஒன்றும் அரசியல் செய்திச் சேனல் அல்ல, அது ஒரு பொழுதுபோக்குச் சேனல் எனும் போது அதற்கேற்றாற் போலான கண்டெண்டுகள் தானே அதில் வடிவமைக்கப் படக்கூடும். இதிலென்ன பிரச்சார உத்தி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது ஃபிலிமாசியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com