கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

வைரலாகும் மிஷெல் ஒபாமாவின் 'வோட்' நெக்லஸ்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா அணிந்திருந்த நெக்லஸ் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

News image

மிஷெல் ஒபாமா

Updated On :18 ஆகஸ்ட் 2020, 11:24 am

DIN

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா அணிந்திருந்த நெக்லஸ் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் தேர்வுக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். 

முன்னதாக, ஜனநாயகக் கட்சி சார்பில் 8 ஆண்டுகள் அமெரிக்க அதிபராக இருந்தவர்  பராக் ஒபாமா. இவரது மனைவி மிஷெல் ஒபாமா, ஜனநாயகக் கட்சி சார்பில் நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில் பேசினார். 19 நிமிட விடியோ உரையில் அவர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். 

Story image

'டிரம்ப் திறமையற்றவர், அவர் நாட்டிற்கு தவறான அதிபர், அவரை நம்பி இனியும் நாட்டை ஒப்படைக்க முடியாது. இந்தத் தேர்தல் நமது எதிர்காலம். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது மக்கள் கையில் உள்ளது. எனவே, நீங்கள்சிந்தித்து வாக்களிக்க வேண்டும்' என ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக பேசியுள்ளார். 

மிஷெல் ஒபாமாவின் ஆவேசப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அதேநேரத்தில், இந்த உரையின்போது அவர் அணிந்திருந்த நெக்லஸ் ஒன்றும் பார்ப்போரை கவர்ந்துள்ளது. 

அவர் அணிந்திருந்த நெக்லஸில் V-O-T-E என்று எழுத்துகள் இடம்பெற்றிருந்தன. மக்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்துவதாக இது இருப்பதாக கருத்துகள் உலவி வருகின்றன. மேலும், மிஷெல் அணிந்திருந்த நெக்லஸை வாங்க விரும்புவதாகவும், இது எப்போது விற்பனைக்கு வரும் என்றும் பெண்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Story image

மிஷெல் ஒபாமாவின் இந்த விடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அமெரிக்காவில் கூகுள் தேடல், சமூக வலைத்தளங்களில் 'மிஷெல் ஒபாமா நெக்லஸ்,' 'வோட் நெக்லஸ்' 'லெட்டர் நெக்லஸ்' என பலரும் அதுகுறித்து தேடி வருகின்றனர். கடந்த ஒரு மணி நேரத்தில் அமெரிக்காவில் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்டவையாக இந்த நெக்லஸ் இருப்பதாகக் கூறுகிறது புள்ளிவிவரங்கள். 

இந்நிலையில் இந்த நெக்லஸின் பிராண்ட் 'பைசாரி'(BYCHARI) என்றும் இதை வடிவமைத்தவர்  சாரி குத்பெர்ட் என்றும் தெரிய வந்துள்ளது. 

சாரி குத்பெர்ட் இதுகுறித்து, 'நான் கடந்த முறை தேர்தலுக்காக இந்த 'வோட்' நெக்லஸை உருவாக்கினேன்.  அவ்வாறு இந்த முறை மிஷெல் ஒபாமாவின் ஒப்பனையாளர் ஒரு நெக்லஸை கேட்கவே, இதனை வடிவமைத்துக் கொடுத்தேன். திடீரென அவர் அணிந்திருந்தது எனக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது' என்கிறார். 

Story image

'பைசாரி' இணையதளத்தில் இந்த நெக்லஸின் குறைந்தபட்ச விலை 295 டாலர் என்றும் 'லெட்டர்' எண்ணிக்கை மற்றும் அளவுக்கு ஏற்ப 1,200 டாலர் வரையில் விற்கப்படுவதாகவும் விரும்பும் லெட்டர்களில் வடிவமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.