உடல் எடையைக் குறைக்கவும் சரும அழகைக் கூட்டவும்

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், சரும அழகைக் கூட்ட விரும்புவோர் தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிடலாம். 
செவ்வாழைப்பழம்
செவ்வாழைப்பழம்
Published on
Updated on
1 min read

அனைத்து தரப்பு மக்களும் உண்ணக்கூடிய, மலிவான விலையில் கிடைக்கக்கூடிய வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. 

ஒவ்வொரு வகையான வாழைப்பழமும் ஒவ்வொரு சிறப்பு பலன்களைத் தரக்கூடியது. அந்த வகையில் செவ்வாழைப் பழத்தின் நன்மைகளை தெரிந்துகொள்வோம். 

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், சரும அழகைக் கூட்ட விரும்புவோர் தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிடலாம். 

செவ்வாழைப்பழத்தில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகம் இருக்கிறது. இதில் பீட்டா கரோட்டின் நம் உடலை புற்றுநோய் செல்களின் தாக்கத்திலிருந்து தடுக்கும். இதயநோய் வராமல் பாதுகாக்கும். 

செவ்வாழையில் நார்சத்து அதிகம் இருப்பதால் நரம்பு கோளாறுகள் உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். 

அதேபோன்று கண் பார்வை கோளாறுகள் உள்ளவர்களுக்கும் இது சிறந்த தீர்வாக இருக்கும். நீரிழிவு நோயாளிகளும் செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். 

எலும்புகள் உறுதியாகவும், சிறுநீரகப் பிரச்னைகளிலிருந்து விடுபடவும் செவ்வாழை பெரிதும் உதவும். 

கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட வேண்டும். பசி எடுப்பதைத் தடுக்கும் என்பதாலும் வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதாலும் இதனை தொடர்ந்து சாப்பிடலாம். 

பல் ஆடுதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு செவ்வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர சரியாகிவிடும். 

சொறி, சிரங்கு உள்ளிட்ட சரும வியாதிகளுக்கும் செவ்வாழைப்பழம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் சருமம் மென்மையாக அழகாக இருக்கவேண்டுமெனில் பெண்கள் செவ்வாழையைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். 

மலச்சிக்கல் பிரச்னைத் தீர்க்கவும் பயன்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com