குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடும் பிரபலம், காரணம் இதுதான்
ஏன் குழந்தைகளைப் பெறுவதில் அவசரப்படவில்லை என்று பீபர் விளக்குகிறார்


உலகப் பிரபலமான பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபரும் அவரது மனைவி ஹெய்லி பால்ட்வினும் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட்டுள்ளனர்.
இந்த ஜோடி 2018-இல் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகளைப் பெறுவதற்கு அவசரம் காட்டவில்லை, அதற்குக் காலம் இருக்கிறது என்று அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளனர்.
"நாங்கள் நிச்சயம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வோம், ஆனால் சரியான நேரத்தில். உலகச் சுற்றுப் பயணம் செய்யவும், வாழ்க்கையை நன்கு அனுபவிக்கவும், எங்கள் உறவை மேலும் வளர்த்துக் கொள்ளவும் அவகாசம் தேவை. பொறுமையாக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று ஆப்பிள் மியூசிக் நிறுவனத்தின் ஜேன் லோவுக்கு அளித்த பேட்டியின் போது பீபர் கூறினார்.

பால்ட்வினுடனான தனது திருமணத்தில் தங்கள் உறவை மிகச் சிறந்ததாக மாற்றுவதற்காக அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து பிபர் சமீபத்தில் பேசியுள்ளார்.
"திருமண வாழ்க்கை மிகவும் அருமை, நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால், அதை முறித்துக் கொண்டு விடாதீர்கள். காரணம் திருமணம் எளிதானது அல்ல" என்று கூறினார் இந்த 25 வயதான திருமணமான இளைஞர். கடந்த வாரம் பிப்ரவரி 11 அன்று லண்டனில் ரசிகர்களுடன் கேள்வி பதில் அமர்வில் இவ்வாறு கூறினார் ஜஸ்டின் பீபர்.
அவர் மேலும் கூறியதாவது: "இது நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய ஒன்று. திருமணம் எளிதானது என்றால், அனைவரும் அதைத்தான் விரைவாகச் செய்வார்கள்." என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...