முதல் திருநங்கை தேர்தல் அதிகாரியாகும் மோனிகா தாஸ்
பிகாரில் இருந்து முதல் திருநங்கை தேர்தல் அதிகாரியாக மோனிகா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


பிகாரில் இருந்து முதல் திருநங்கை தேர்தல் அதிகாரியாக மோனிகா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருகிற அக்டோபர் 28 முதல் துவங்கவுள்ள பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாட்னா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து தங்கப்பதக்கம் வென்றவர். தற்போது 32 வயதாகும் மோனிகா தாஸ், 2015 முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து வரும் மாநிலத்தின் முதல் திருநங்கை ஆவார்.
தற்போது தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலமாக, முதல் முறையாக ஒரு திருநங்கையை தேர்தல் அதிகாரியாக நியமித்த மாநிலம் என்ற பெருமையை பிகார் பெற்றுள்ளது.
பாட்னாவில் உள்ள மற்ற அதிகாரிகளுடன் மோனிகா தாஸுக்கும் அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப்படும் என்று பிகார் தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர். சீனிவாசா தெரிவித்தார்.
பிகாரில் தேர்தல் பட்டியலின்படி, சுமார் 2,344 திருநங்கைகள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். பிகாரில் சுமார் 40,000 திருநங்கைகள் உள்ளனர்.
நாட்டின் முதல் திருநங்கை தேர்தல் தலைமை அதிகாரியாக மோனிகா தாஸ் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி தெரிவித்த புதுதில்லியில் உள்ள திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சிலின் உறுப்பினர் ரேஷ்மா பிரசாத், இது அனைத்து திருநங்கைகளுக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என்றார்.
முன்னதாக 2016 ஆம் ஆண்டில், திருநங்கையான ரியா சர்க்கார், மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...