மார்பகப் புற்றுநோயாளிகள் நட்ஸ் சாப்பிடுவதால்...

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நட்ஸ் சாப்பிடுவது நோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நட்ஸ் சாப்பிடுவது நோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வின் முடிவுகள் 'இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கேன்சர்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

மார்பகப் புற்றுநோயாளிகள் நட்ஸ் சாப்பிடுவது என்னென்ன நன்மைகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்படி, மார்பகப் புற்றுநோயாளிகள் தொடர்ந்து நட்ஸ் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் மீண்டும் மீண்டும் வருவது மற்றும் புற்றுநோய் இறப்பு அபாயங்கள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக ஆய்வில் பங்கேற்ற 3,449 மார்பகப் புற்றுநோயாளிகளின் உணவில் நட்ஸ் வகைகள் சேர்க்கப்பட்டன. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நோயாளிகளின் இறப்பு விகிதம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. 

புற்றுநோய் ஏற்பட்டு குணமடைந்தவர்கள் 3,274 பேரில் 209 பேருக்கு மட்டுமே மீண்டும் புற்றுநோயின் தாக்கம், இறப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும், நட்ஸ் வகைகளை முறையாக சரியான அளவு தினமும் உட்கொள்பவர்களுக்கு இறப்புக்கான அபாயம் வெகுவாகக் குறைந்தது. 

மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப நிலைகளில் இருப்பவர்கள் நட்ஸ் சாப்பிடுவது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com