
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், அறிவுத்திறனுக்கும் சிறுவயதில் இருந்தே சத்தான உணவுகளை கொடுக்க வேண்டியது தாய்மார்களின் அடிப்படைக் கடமையாகும். அந்தவகையில் குழந்தைகளுக்கு கீழ்குறிப்பிட்ட இந்த 5 பொருள்கள் குழந்தைகளின் அன்றாட உணவில் இடம்பெற வேண்டும்.
பால்
பாலில் உள்ள புரதம், கொழுப்பு, கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்க நாள் ஒன்றுக்கு குறைந்தது 2 முதல் 3 தம்ளர் பால் கொடுக்க வேண்டும்.
வாழைப்பழம்
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் புரதச் சத்து உடலின் பல்வேறு உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதேபோல குழந்தைகளின் வயதுக்கு ஏற்றவாறு மற்ற பழங்களையும் மசித்து படிப்படியாகக் கொடுக்கலாம்.
முட்டை
அதிக புரதச் சத்து கொண்ட முட்டையை குழந்தைகளின் உணவில் தவறாது சேர்க்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு முட்டையை குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவி புரியும்.
உலர் திராட்சை
மற்ற நட்ஸ் வகைகளை காட்டிலும் மலிவான விலையில் கிடைக்கக் கூடியது உலர் திராட்சை. இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதால், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து எளிதாகக் கிடைக்கிறது. உலர் திராட்சையை அப்படியே கொடுக்கமுடியாவிட்டால் அதனை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரைக் கொடுக்கலாம்.
பருப்பு வகைகள்
குழந்தைகளின் அன்றாட உணவில் முக்கிய இடம் பெறவேண்டியது பருப்புகள். பருப்புகளில் அதிகமான புரதச்சத்து மற்றும் தாதுச்சத்து நிரம்பியுள்ளது. வேர்க்கடலை, பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகளையும் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு நவீன உணவுகள் என்ற பெயரில் கடைகளில் விற்கும் ஸ்னாக்ஸ் பொருள்களைக் கொடுக்காமல் வீட்டில் செய்த உணவுகளை கொடுத்துப் பழக்குங்கள்.