பார்ப்பதைவிட 'கேட்பதை' விரும்பும் குழந்தைகள்!

கரோனா பொதுமுடக்கத்தால் ஆன்லைன் வகுப்பு என்ற புதிய கல்வி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குழந்தைகளின் கல்வி குறித்து பெற்றோர்கள் கவலை அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குழந்தை வளர்ப்பு என்பது இப்போது பெற்றோர்கள் பலருக்கும் சவாலான ஒன்றாகவே உள்ளது. அதிலும் வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் ஒரு நாளைக்கு சில மணி நேரங்களே குழந்தைகளுடன் செலவழிக்கும் சூழ்நிலை நிலவுகிறது. குழந்தைகளின் மனநிலையை புரிந்துகொள்ள முடியாத நிலையிலே பல பெற்றோர்கள் உள்ளனர்.

கரோனா பொதுமுடக்கத்தால் ஆன்லைன் வகுப்பு என்ற புதிய கல்வி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குழந்தைகளின் கல்வி குறித்து பெற்றோர்கள் கவலை அதிகரித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் போதுமான கல்வியை கற்பிப்பதில்லை என்றே பலர் கூறுகின்றனர். மேலும் நாள் முழுவதும் குழந்தைகளை வீட்டில் வைத்து சமாளிப்பது கடினமாக இருக்கிறது என்ற பெற்றோர்களின் வார்த்தைகளும் பொதுவானதே. 

ஆனால், குழந்தைகளின் நடவடிக்கைகள் தொடர்பான உளவியல் காரணங்களையும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள முற்படுவதில்லை. குழந்தைகளின் மனதுக்கு ஒத்த விஷயங்களை செய்யச்சொல்ல வேண்டும். அவர்களுக்கு போதிக்க விரும்பும் விஷயங்களில் அவர்களின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். இதில் குறிப்பாக குழந்தைகளுக்கு கல்வியை எந்தவகையில் போதிப்பது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். 

இந்நிலையில், குழந்தைகளின் மனநிலை குறித்து ஆய்வாளர்கள் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், குழந்தைகள் ஒரு விஷயத்தை பார்ப்பதைக் காட்டிலும் 'கேட்பது' அவர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. 

டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை ஆய்வாளர்களின் இந்த ஆராய்ச்சி, ஒரு சூழ்நிலையின் உணர்ச்சிகளை குழந்தைகள் எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்கள் என்பது பற்றியது.

பெரியவர்கள் ஒரு கருத்தை உள்வாங்க 'பார்ப்பதற்கு' முன்னுரிமை அளிக்கும் நிலையில், குழந்தைகள் 'கேட்பதை' விரும்புகின்றனர். உணர்ச்சி சார்ந்த விஷயங்களை குழந்தைகள் பார்ப்பதைவிட கேட்க விரும்புகின்றனர் என்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

பல குழந்தைகள் தற்போது வீட்டில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். கரோனா பொதுமுடக்கத்தால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி பயில்கிறார்கள். பள்ளியில் இருந்து படிப்பதற்கும், வீட்டில் இருந்து படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

எனவே, இம்மாதிரியான சூழ்நிலையில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆன்லைன் கற்றலை குழந்தைகளிடம் எவ்வாறு திறம்பட உருவாக்குவது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

இம்மாதிரியான ஆய்வின் முடிவுகளை முயற்சி செய்து பார்க்கலாம். குழந்தைகளுக்கு கல்வியை 'கேட்டல்' வடிவில் வழங்கலாம். இந்த மாற்றம் அவர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினால் தொடரலாம். முன்னதாக, செயல்வழிக் கற்றலைவிட கதைகள் மூலமாக கல்வி பெறுவதை மாணவர்கள் விரும்புவதாக ஆய்வொன்று கூறுகிறது. எனவே இம்மாதிரியான முறையில் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கலாம். 

இதை முயற்சியுடன்,  உங்கள் குழந்தைகள் எதை விரும்புகின்றன என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கேற்ப திட்டமிடுவதும் நலம். குழந்தை வளர்ப்பிற்கு குழந்தைகள் குறித்த நம்முடைய புரிதல் அவசியம். 

உளவியல் ரீதியாகவும் குழந்தைகளின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு அவர்களின் மன ஆரோக்கியத்தை காக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com