சருமத்திற்கு கழுதைப் பால் நல்லதா?

அழகுக்கு உவமையாகக் கூறப்படும் கிளியோபாட்ரா, தன்னுடைய சருமத்தைப் பாதுகாக்க, பளபளப்பாக வைத்துக்கொள்ள தினமும் கழுதைப்பாலில் குளித்ததாக சொல்லப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அழகுக்கு உவமையாகக் கூறப்படும் கிளியோபாட்ரா, தன்னுடைய சருமத்தைப் பாதுகாக்க, பளபளப்பாக வைத்துக்கொள்ள தினமும் கழுதைப்பாலில் குளித்ததாக சொல்லப்படுகிறது.

இதுதவிர, மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்ஸ், காய்ச்சல், காயங்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கழுதைப் பாலை பரிந்துரைத்திருக்கிறார். 

பசுவின் பாலைவிட கழுதையின் பாலில் நான்கு மடங்கு வைட்டமின்-சி உள்ளதால் கழுதைப் பால், சருமத்திற்கும் உடலுக்கும் சிறந்தது என்றும் ஊட்டச்சத்துக்களின் மையமாக இருக்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இளமையை தக்கவைக்கவும் வலிகளைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

பாலில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை மங்கச் செய்து, சேதமடைந்த சருமத்தை மீண்டும் உருவாக்க உதவுகின்றன. கூடுதலாக, கழுதைப் பாலில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. அவை தோல் எரிச்சல் மற்றும் அழற்சியைக் குணப்படுத்தும். 

'இளைஞர்களின் இயற்கையான அமுதம்' என்று அறியப்படும் கழுதைப் பாலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் ஈ, அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் ஏ, பி 1, பி 6, சி, இ, ஒமேகா 3, மற்றும் 6 ஆகியவை உள்ளன. மேலும், வைட்டமின் டி, சருமத்திற்குத் தேவையான மற்றொரு முக்கியமான மூலப்பொருள். சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களின் மூலமாக இது கிடைக்கின்றது. அதேநேரத்தில் அதிக புறஊதாக் கதிர்களை சருமம் பெறும்போது எதிர்மறை விளைவுகளும் ஏற்படுகின்றது. ஆனால், இயற்கையாகவே வைட்டமின்-டி இருப்பதால் கழுதைப்பால் இதற்கு ஒரு சிறந்த மாற்றாக செயல்படுகிறது. 

சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், கழுதைப் பால் தொடர்ந்து பயன்படுத்தினால், அது ஒரு சிறந்த சுத்தப்படுத்தியாகவும், சருமத்தை ஆரோக்கியமாகவும், ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

எனவே கழுதைப் பால், அதன் குணப்படுத்துதல், ஊட்டச்சத்து மற்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் பண்புகளுடன் கூடிய சருமப் பராமரிப்புக்கான ஒரு முக்கிய பொருளாக வேகமாக வளர்ந்து வருகிறது. கழுதைப் பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்பு, கிரீம் போன்றவையும் சந்தையில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com