தினமும் வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லதா?

தட்பவெப்பநிலை எப்படி இருந்தாலும் குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் அதிகம் அருந்துவது மக்களிடையே அதிகரித்து வருகிறது. 
தினமும் வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லதா?

தட்பவெப்பநிலை எப்படி இருந்தாலும் குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் அதிகம் அருந்துவது மக்களிடையே அதிகரித்து வருகிறது. டீ, காபி தவிர பெரும்பாலானோர் உணவகங்களுக்கு சாப்பிடச் சென்றாலும் சாப்பாட்டுக்குப்பின் குளிர்பானங்களையே அருந்துகின்றனர். 

ஆனால், இது மிகவும் தவறு. பிரிட்ஜில் இருந்து 'ஜில்' என்று இருக்கும் தண்ணீரை அப்படியே அருந்துவதால் உடல்நலத்திற்கு பல தீங்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை அருந்துவதால், சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்ப் பொருள்கள் திடப்பொருளாக மாறி, செரிமானத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். 

அதேநேரத்தில் சூடான/வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. 

காய்ச்சிய நீரை பருகுவது பல்வேறு வகை தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். தினமும் அனைத்து நேரங்களிலும் வெந்நீர் குடிக்கலாம்.  அல்லது சாப்பிட்ட பிறகு மட்டும் வெந்நீர் குடிக்கலாம், மற்ற நேரங்களில் காய்ச்சிய வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம். 

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சருமத்தின் அழகைக் கூட்ட விரும்புபவர்கள் முடிந்தவரை அனைத்து நேரங்களிலும் வெந்நீர் குடிப்பது நல்லது. 

உணவு சாப்பிட்ட பிறகு குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்கும். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் குடிப்பது நல்லது. 

வெந்நீர் உடலில் நச்சுகளை வெளியேற்றும். நரம்பு மண்டலத்தை சுத்திகரிக்கும். 

சூடான நீரை குடிக்க முடியாதவர்கள் காய்ச்சிய நீரை பருகலாம். சூடான/ காய்ச்சிய நீரை பருகுவதால் நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். 

உடல் பருமன் உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் சூடான தண்ணீரை குடித்த பின்னர் லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com