ஆண்களுக்கு இதயக் கோளாறு ஏன் அதிகம் ஏற்படுகிறது?

வயதான ஆண்களுக்கு இதயக் கோளாறு, இதயச் செயலிழப்பு ஏன் அதிகம் ஏற்படுகிறது என்பது குறித்த சமீபத்திய ஓர் ஆய்வில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

வயதான ஆண்களுக்கு இதயக் கோளாறு, இதயச் செயலிழப்பு ஏன் அதிகம் ஏற்படுகிறது என்பது குறித்த சமீபத்திய ஓர் ஆய்வில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. 

ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கீழ்குறிப்பிட்டுள்ள முடிவுகள் கிடைத்துள்ளன. 

அதன்படி, ஆண்களில் இதயக் கோளாறு ஏற்பட முக்கியக் காரணம் 'ஒய்' குரோமோசோம் இழப்பு என்கின்றனர் ஆய்வாளர்கள். 

'ஒய்' குரோமோசோம் என்பது ஆண்களின் குரோமோசோமாக அறியப்படுகிறது. வயதான ஆண்களில், 'ஒய்' குரோமோசோம் குறையும்போது  இதயத்தில் ஃபைப்ரோஸிஸ் வளர்ச்சி அடைகிறது, இதனால் இதயம் பலவீனம் அடைகிறது. இதன் விளைவாக இதய நோய்கள் ஏற்படுகின்றன என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்படி, ஆண்களின் வெள்ளை ரத்த அணுக்களில் ஒய் குரோமோசோமின் எண்ணிக்கை குறைகிறது. இதன் காரணமாகவே பெண்களைவிட வயது குறைந்த ஆண்கள் இறக்கின்றனர். 

இந்த மரபணு மாற்றம், அதாவது ஒய் குரோமோசோம் இழப்பு (mLOY -மொசைக் லாஸ் ஆஃப் ஒய்) மிகவும் பொதுவானது, 60 வயதுடையவர்களில் குறைந்தது 20 சதவீதத்தினருக்கும், 70 வயதுடைய ஆண்களில் 40 சதவீதத்தினருக்கும் கண்டறியப்படுகிறது. 

ரத்தத்தில் உள்ள mLOY ஆல் ஆண்கள் இதய நோய்களால் இறக்கும் அபாயம் அதிகம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ஆண்கள் இதய நோய்களால் இறக்கும்பட்சத்தில் அவர்களின் பெரும்பாலான மரணத்துக்குக் காரணமானது இந்த mLOY. 

மாதிரி பரிசோதனையில் எலிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com