விடியோ கேம் விளையாடினால்...! - ஆய்வு சொல்வது என்ன?

விடியோ கேம் விளையாடுவது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 
விடியோ கேம் விளையாடினால்...! - ஆய்வு சொல்வது என்ன?

விடியோ கேம் விளையாடுவது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

மொபைல் பயன்பாடு பெருகியுள்ள அதேநேரத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விடியோ கேம் எனும் ஆன்லைன் விளையாட்டுகளின் பயன்படும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் விடியோ கேம் விளையாடுபவர்களின் செயல்திறன் குறித்த ஜார்ஜியா ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், விடியோ கேம் விளையாடுபவர்கள் சிறந்த முடிவெடுக்கும் திறன்களை கொண்டிருப்பதாகவும் அவர்களின் மூளையின் செயல்பாடு மேம்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

'ஒவ்வொரு வாரமும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெரும்பாலான இளைஞர்கள் விடியோ கேம்களை விளையாடுகிறார்கள். அவர்களுக்கு மூளையை செயல்பட வைக்கும் பயிற்சி அளிக்க இதனைப் பயன்படுத்தலாம். மேலும் இதனால் பார்வைத்திறனும் மேம்படுகிறது' என இணைப் பேராசிரியர் முகேஷ் தமலா கூறினார். 

கல்லூரி மாணவர்கள் 47 பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் 28 பேர் விடியோ கேம் விளையாடுபவர்கள். இதில் விடியோ கேம் விளையாடாதவர்களை ஒப்பிடுகையில், விளையாடுபவர்களின் உணரும் திறன், முடிவெடுத்தல் உள்ளிட்ட மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. 

விடியோ கேம் விளையாடுவதால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் வீணாவதாகக் கூறப்படும் இந்த சூழ்நிலையில் அதற்கு எதிராக ஒரு ஆய்வின் முடிவு வந்துள்ளது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எனினும், இதுகுறித்த மேலும் ஆராய்ச்சிகளுக்கான தொடக்கமாக இது இருக்கும் என்றும் ஆய்வாளர் முகேஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com