இந்த  உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் ஆபத்தா?

நாம் உட்கொள்ளும் சில அன்றாட உணவுகள் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட பிறகு பாதுகாப்பாக இருக்காது. அதிக புரதம் கொண்ட உணவுகளை ஒருபோதும் மீண்டும் சூடாக்க கூடாது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாம் உட்கொள்ளும் சில அன்றாட உணவுகள் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட பிறகு பாதுகாப்பாக இருக்காது. அதிக புரதம் கொண்ட உணவுகளை ஒருபோதும் மீண்டும் சூடாக்க கூடாது. ஏனெனில் சூடுபடுத்தப்பட்ட உணவுகளை  உட்கொள்ளும் போது அவற்றின் ஊட்டச்சத்து இழக்கப்படுகிறது. 

1. கீரைகள் மற்றும் காய்கறிகள்

அதிக அளவு நைட்ரேட் கொண்ட காய்கறிகள் மற்றும் கீரைகளை சூடுபடுத்துவதைத் தவிர்க்கவும். நைட்ரேட் நிறைந்த காய்கறிகளை மீண்டும் சூடுபடுத்தும் போது நச்சுத்தன்மையுடையதாக மாறி, புற்றுநோயை உண்டாக்கும் பண்புகளை வெளியிடுகிறது. பசலைக்கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது, எனவே கீரைகளை மீண்டும் சூடுபடுத்துவதால் கீரைகளில் உள்ள இரும்புச்சத்து ஆக்ஸிஜனேற்றப்படும். இரும்பின் ஆக்சிஜனேற்றம் ஆபத்தான ஃப்ரீரேடிக்கல்களை உருவாக்குகிறது, இது கருவுறாமை மற்றும் புற்றுநோய் உள்பட பல நோய்களை ஏற்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.


2. சாதம்

சாததை மீண்டும் சூடுபடுத்தவதால் அந்த உணவில் நச்சுத்தன்மை மிகுந்திருக்கும். இதற்குக் காரணம் பேசிலஸ் செரியஸ் எனப்படும் அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரியாக்கள் இருப்பதுதான். சிலர் பிரியாணி, கலந்த சாதங்கள் அதிகமாக இருக்கும் போது குளிரிசாதனப் பெட்டியுல் வைத்து மறுநாள் சூடுபடுத்தி உட்கொள்ளும்போது நச்சுத்தன்மை மிகுந்திருக்கும்.

 
3. முட்டை

முட்டை புரதத்தின் வளமான ஆதாரமாக இருக்கிறது. சமைத்த முட்டை அல்லது வேகவைத்த முட்டையை மீண்டும் சூடாக்க வேண்டாம். மாறாக குளிர்ச்சியாக சாப்பிடுங்கள். ஏனெனில் முட்டையில் அதிக நைட்ரஜன் நிறைய உள்ளது. இந்த நைட்ரஜன் மீண்டும் சூடுபடுத்துவதால் ஆக்சிஜனேற்றம் அடையலாம். மேலும் புற்றுநோயை உண்டாக்கும்.
 
4. சிக்கன் 

கோழி இறைச்சியை மீண்டும் சூடாக்க வேண்டாம். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்து சூடுபடுத்தும் போது,  கோழி இறைச்சியில் உள்ள புரதம் முற்றிலுமாக மாறுகிறது. இது செரிமான அமைப்பில் பிரச்னைகளை ஏற்படுத்தும். 

5. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளது. இருப்பினும் உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்தினால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்;
 
6. காளான்

காளானை சமைத்தவுடன் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் காளனில் உள்ள புரதங்கள் மற்றும் ஏராளமான  தாதுக்கள் உள்ளதால், அவற்றை மீண்டும் சூடாக்குவதன் மூலம், புரதங்கள் மாற்றமடைந்து  செரிமான அமைப்பில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. 
 
7. சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதை மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். 

பொதுவாக உணவை தேவைக்கு சமைத்து சூடாக சாப்பிடுவதுதான் நல்லது. குறிப்பாக மேற்கண்ட உணவுகளை எப்போதும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com