இதயத்தைக் காக்கும் 'வால்நட்'; எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும்?

வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளின் மூலமாக நிரூபித்துள்ளனர்.
இதயத்தைக் காக்கும் 'வால்நட்'; எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும்?

இந்த நவீன காலகட்டத்தில் உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தினால் உடலில் நோய்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். 

அந்தவகையில், வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளின் மூலமாக நிரூபித்துள்ளனர்.

மேலும், குடலில் உள்ள கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதோடு, நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும். இந்த பாக்டீரியாக்கள் குடல் மற்றும்  இதயத்தின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

அதுமட்டுமின்றி, வால்நட்ஸில் உள்ள ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை குறைத்தல் உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக்கிறது. 

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

நாள் ஒன்றுக்கு 28 கிராம் அக்ரூட் பருப்புகள் சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இந்த 28 கிராம் வால்நட்டில் 2.5 கிராம் ஒமேகா -3 கொழுப்பு, 4 கிராம் புரதம் மற்றும் 2 கிராம் ஃபைபர் உள்ளது. 

எப்போது சாப்பிடலாம்?

வால்நட்ஸை எந்த நேரத்திலும் உண்ணலாம் என்றாலும் மாலை நேரத்தில் சாப்பிடவது சிறந்தது என்றும் இது மூளையில் செரோடோனின் அளவை அதிகரித்து தூக்கத்தை ஊக்குவிக்கிறது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com