குறைந்த ரத்த அழுத்தமா? எப்படி சரிசெய்யலாம்?

இன்றைய வாழ்க்கைச் சூழலில் உடலுக்கு ஏற்படும் தொந்தரவுகள் என்பது அதிகமாகிவிட்டன. உடல் மற்றும் மன நலப் பிரச்னைகளால் பல்வேறு தொடர் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறைந்த ரத்த அழுத்தமா? எப்படி சரிசெய்யலாம்?

இன்றைய வாழ்க்கைச் சூழலில் உடலுக்கு ஏற்படும் தொந்தரவுகள் என்பது அதிகமாகிவிட்டன. உடல் மற்றும் மன நலப் பிரச்னைகளால் பல்வேறு தொடர் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அந்தவகையில் உடலில் ரத்த அழுத்தம் குறைவது, மோசமான அறிகுறிகளுடன் இல்லாமல் இருந்தால் பெரிய பிரச்னை அல்ல என்கின்றனர் நிபுணர்கள். 

ஏன் ஏற்படுகிறது? 

இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்லாததால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உடல் மற்றும் மனநிலையால் சில நிமிடங்களுக்கு ரத்த ஓட்டம் நிற்பதால் இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் நின்றுவிடுவதால் ரத்த அழுத்தம் குறைகிறது. 

யாருக்கு ஏற்படுகிறது? 

குறைந்த ரத்த அழுத்தம் யாருக்கு வேண்டுமானால் ஏற்படலாம். எனினும் ஹார்மோன் பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், ரத்த சோகை, கடுமையான நோய்த்தொற்று, இதய நோய், நுரையீரல் பிரச்னை, சிறுநீரகப் பிரச்னை, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படலாம். 

கர்ப்பிணிகளுக்கு முதல் 24 வாரங்களில் பொதுவாகவே குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும். அந்த நேரத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது. 

அறிகுறிகள் 

தலைசுற்றல், மயக்கம், வாந்தி, மங்கலான பார்வை, அதிக தாகம், சோர்வு, படபடப்பு, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகள் இருக்கும். 

சரிசெய்ய என்ன சாப்பிடலாம்?

நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலமும், சத்தான உணவை உட்கொள்வதன் மூலமும், உணவில் உப்பை சற்று அதிகரிப்பதன் மூலமும், ஆல்கஹாலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் குறைந்த ரத்த அழுத்தத்தை இயற்கையாகவே சரிசெய்ய முடியும்.

1. நிறைய தண்ணீர் குடிக்கவும்

சிலருக்கு உடலில் லேசான நீரிழப்பு ஏற்பட்டால்கூட குறைந்த ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். வாந்தி, கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கடுமையான உடற்பயிற்சி மற்றும் அதிகப்படியான வியர்வையால் உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். 

2. சமச்சீரான உணவை உண்ணுங்கள்

உடலில் வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து ஆகியவற்றின் குறைபாடு இருந்தால் ரத்த சோகை ஏற்படும். இதனால் ரத்த அழுத்தம் குறையலாம். எனவே, மேற்குறிப்பிட்ட சத்துகள் கொண்ட உணவை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

3. கார்போஹைட்ரேட் குறைவாக உண்ணுங்கள்

ரத்த அழுத்தம் குறைவதைத் தடுக்க குறைவாக உண்ண வேண்டும். குறிப்பாக, உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டுகளைக் குறைக்க வேண்டும். 

4. மதுவைத் தவிர்க்கவும் 

மது அருந்துவது நீரிழப்புக்கு வழிவகுக்கும். இது உண்ணக்கூடிய மருந்துகளுடன் சேர்ந்து குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

5. அதிக உப்பு சாப்பிடுங்கள்

சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. அதேநேரத்தில் அதிகமாக உப்பு சேர்ந்தால் ரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும், இதய நோய்க்கும் வழிவகுக்கும். எனவே, ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்க த் தேவையான உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். 

சோடியம் நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com