தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

மொபைல்போன் பாஸ்வேர்டு/பேட்டர்ன் மறந்துவிட்டதா? நீங்களே சரி செய்யலாம்!

மொபைல்போன் பாஸ்வேர்டு/பேட்டர்ன் மறந்துவிட்டதா? பாஸ்வேர்டை நீக்க என்னென்ன வழிகளை பயன்படுத்தலாம்?

News image
Updated On :6 செப்டம்பர் 2022, 0:55 pm IST

நவீன உலகத்தில் மொபைல்போன் பயன்பாடு இன்று பல்கிப் பெருகிவிட்டது. பயன்பாட்டிற்கேற்ப அதில் அப்டேட்டுகளும் வந்துகொண்டிருக்கின்றன. 

அந்தவகையில் இன்று பலரும் மொபைல்போன் பாஸ்வேர்டை மறந்துவிடுகிறார்கள். அவ்வாறு மறந்துவிட்டால் போனை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால், நீங்களே சில வழிகளைக் கையாளுவதன் மூலமாக மீண்டும் அதைப் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் யாருடைய உதவியையும் நாடத் தேவையில்லை. 

 கூகுள் அக்கவுண்ட்

ஆண்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் அக்கவுண்ட் மூலமாக சரிசெய்யலாம். அதாவது உங்கள் போனில் கூகுள் அக்கவுண்ட்டை லாக்இன் செய்திருந்தால் எளிதாகத் திறக்கலாம். 

உங்கள் மொபைல்போனில் தவறான கடவுச்சொல் என்று பலமுறை காட்டிய பிறகு, சிறிதுநேரம் கழித்து அடுத்த முயற்சியாக 'forget the password or pattern'(பேட்டர்ன்/பாஸ்வேர்டு மறந்துவிட்டது) என்று திரையில் தோன்றும். 

அதை கிளிக் செய்த பிறகு, அந்த போனில் பதிவு செய்யப்பட்ட கூகுள் மெயில் ஐடி கேட்கும். அதை உள்ளிட்டபிறகு போன் அன்லாக் ஆகிவிடும். இப்போது புதிய பாஸ்வேர்டை நீங்கள் செட் செய்துகொள்ளலாம். 

இவ்வாறு செய்வதற்கு இணைய வசதி தேவை. வை-பையில் கனெக்ட் செய்துகொள்ளுங்கள். 

Story image

ரீ-செட் 

ஆண்ட்ராய்டு சாதனங்களில் முந்தைய வழிமுறையில் போன் அன்லாக் ஆகவில்லை எனில் கீழ்வரும் முறையைப் பின்பற்றவும். 

முதலில் போனை சுவிட்ச்-ஆப் செய்யவும். பின்னர் ஒரேநேரத்தில் 'மேல் வால்யூம்' பட்டன் மற்றும் 'பவர் பட்டனை' சேர்த்து சிறிது நேரம் அழுத்தவும். (சில போன்களில் கீழ் வால்யூம் பட்டன்)

இப்போது recovery ஆப்ஷன் தோன்றும். அதில் 'reset' என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் ‘Clean/Erase Data’ and ‘Wipe Cache’ என்ற ஆப்ஷன்கள் தோன்றும். 

இப்போது போன் ரீ-செட் ஆகிவிடும். மீண்டும் போனை ஆன் செய்தால் பாஸ்வேர்டு இன்றி திறக்கும். ஆனால், இதில் போனில் உள்ள தரவுகள் அனைத்தும் அழிந்துவிடும். 

Story image

ஐ-போன் பயனர்களுக்கு 

ஐபோனில் பாஸ்வேர்டு மறந்துவிட்டால்... 

போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுங்கள். recovery முறைக்குச் செல்ல, உங்கள் போனை உங்கள் Macbook அல்லது PC உடன் இணைத்த பிறகு பவர் பட்டனை சிறிது நேரம் அழுத்தவும். பின்னர் திரையில் recovery ஆப்ஷன் தோன்றும். அதில் சென்று ரீ-செட் செய்துகொள்ளலாம். 

இதற்காக Macbook அல்லது PCல் iTunes இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.  iTunes-இல் restore ஆப்ஷனை கிளிக் செய்தால் பாஸ்வேர்டு நீக்கப்பட்டு, மற்ற தரவுகள் எல்லாம் சேமிக்கப்பட்டுவிடும். 

இப்போது புதிய பாஸ்வேர்டை செட் செய்துகொள்ளலாம்.

ஐபோன்7 சீரிஸ் பயனர்கள் 'கீழ் வால்யூம்' பட்டனையும் பழைய ஐபோன்களில் ஹோம் பட்டனையும் கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.