முகப்பருக்களை விரட்ட... சில எளிய குறிப்புகள்!
By DIN | Published On : 07th December 2022 04:22 PM | Last Updated : 07th December 2022 04:22 PM | அ+அ அ- |

முகத்தின் அழகைக் கெடுக்கும் பருக்கள் இருபாலருக்கும் குறிப்பாக பெண்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. ஆனால் இது பொதுவானதுதான்.
பருவநிலை மாற்றம், உடலியல் செயல்பாடுகளில் மாற்றம், உணவுப்பழக்கவழக்கம், சருமத்தில் அழுக்கு தேங்குதல், சருமப் பிசுபிசுப்பு உள்ளிட்ட காரணங்களினால் முகப்பரு மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது. முகப்பருக்கள் வந்துவிட்டால் தொடர்ந்து சருமத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் என்பதால் முகப்பருக்களின் மீது கை வைக்கக் கூடாது.
முகப்பருக்களை விரட்ட சில எளிய குறிப்புகள் இதோ..
♦ முகப்பருக்களை விரட்ட மஞ்சள் மிகச்சிறந்த பொருள். தினமும் காலை, மாலை என இரு நேரங்களில் முகத்தில் மஞ்சள் தடவிவிட்டு குறிப்பாக பருக்கள் இருக்கும் பகுதியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
♦ அதேபோன்று ஒவ்வொரு முறையும் முகத்தைக் கழுவிய பின்னர் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரை தடவி வர பருக்கள் இன்றி முகம் பொலிவுடன் இருக்கும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும்.
♦ அதுபோல, சந்தனம் சருமத்திற்கு குளிர்ச்சி தரக்கூடியது. எனவே, முகத்தில் சந்தனத்தை அப்ளை செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து உணர்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பருக்களின் மீது சந்தனம் தடவி வர பருக்கள் மறையும்.
♦ உங்கள் சருமம் பிசுபிசுப்பானது என்றால் கண்டிப்பாக ஒருமுறை ஐஸ் வாட்டர் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும்.
♦ இதுதவிர அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும், துரித, எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும், எளிதாக செரிமானம் அடையக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும், மன அழுத்தம் இருந்தால் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
இதையும் படிக்க | மன அழுத்தம், பதற்றம் அதிகம் உள்ளதா? இந்த 5 விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!