நீரிழிவு நோயாளிகளுக்கு காசநோய் ஏற்படுமா? - ஆய்வு என்ன சொல்கிறது?

நீரிழிவு மற்றும் காசநோய் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்றும் ஒன்று, மற்றொன்றைத் தூண்டும் என்றும் தேசிய சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 
நீரிழிவு நோயாளிகளுக்கு காசநோய் ஏற்படுமா? - ஆய்வு என்ன சொல்கிறது?

நீரிழிவு மற்றும் காசநோய் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்றும் ஒன்று, மற்றொன்றைத் தூண்டும் என்றும் தேசிய சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைக் குறிக்கும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இன்று அதிகம். இந்நிலையில் நீரிழிவு நோய்க்கும் காசநோய்க்கும் இருக்கும் தொடர்பு குறித்து தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நீரிழிவு நோயானது, காசநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் இரண்டு நோய்களும் ஒன்றையொன்று வேகப்படுத்தலாம் என்றும் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர் மற்றும் அறிவியல் இயக்குனர் (ஐசிஇஆர்), டாக்டர் சுபாஷ் பாபு தெரிவித்தார். 

'நீரிழிவு நோய், காசநோய் அறிகுறிகளை மோசமாக்கலாம் அல்லது நீரிழிவு நோய் இருக்கும்பட்சத்தில், காசநோய் சிகிச்சையை உடல் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். நீரிழிவு நோய் இருந்தால், காசநோய் ஏற்பட்டு குணமடைந்த பிறகும் காசநோய் மீண்டும் வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது.

உலக மக்கள்தொகையில் கால் பகுதியினர் டி.பி. பாக்டீரியாவால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பத்து பேரில் ஒருவர் மட்டுமே காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோய் இருக்கும் நபர்களுக்கு காசநோய் ஏற்படும் அபாயம் மூன்று மடங்கு அதிகரிக்கிறது' என்றும் கூறினார். 

சென்னையில், பேராசிரியர் எம்.விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையம் நடத்திய ஓர் ஆய்வில், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

ஐசிஇஆர் இந்தியா, எம்விடிஆர்சி மற்றும் ஐசிஎம்ஆர்-என்ஐஆர்டி போன்ற அமைப்புகளும் காசநோய், நீரிழிவு நோயைத் தூண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளன.

மேலும் இதுகுறித்து டாக்டர் பாபு கூறுகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு காசநோய் ஏற்படும்பட்சத்தில் அவருக்கு காசநோய் சிகிச்சை அளிக்கலாம். ஆனால், அது குணமடைந்தாலும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். சில நேரங்களில் சிகிச்சை தோல்வியில் முடியலாம். அதுபோலவே, காசநோய், தூண்டப்பட்ட ஹைப்பர் கிளைசீமியா எனப்படும் செயல்முறையைத் தூண்டும், இதன் காரணமாக நீரிழிவு அல்லாத நபர்களுக்கு நீரிழிவு அபாயம் ஏற்படலாம்' என்று விளக்கினார். 

காசநோய் (TB) நுரையீரலைத் தாக்கும் மைக்கோபாக்டீரியம் என்ற பாக்டீரியத்தால் ஏற்படுகிறது. நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் திறம்பட பயன்படுத்த முடியாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com