ஐஷேடோவை எப்படிப் போட வேண்டும் தெரியுமா? இதோ 6 எளிய வழிகள்

கண் அலங்காரம்தான் மிகவும் முக்கியத்துவம் பெறும். அது கிட்டத்தட்ட ராக்கெட் தயாரிப்பது போல சிலருக்குக் கடினமாகக் கூட இருக்கலாம்.
மீன் போன்ற கண்கள் வேண்டுமா? இதோ 6 எளிய வழிகள்
மீன் போன்ற கண்கள் வேண்டுமா? இதோ 6 எளிய வழிகள்


பொதுவாக ஒப்பனை எனப்படும் அலங்காரம் செய்யாவிட்டால் கூட, ஒருவரது கண் பளீச்சென்று இருந்தாலே அவர் அழகாகத் தெரிவார். அதுபோலத்தான், ஒட்டுமொத்த அலங்காரத்திலுமே, கண் அலங்காரம்தான் மிகவும் முக்கியத்துவம் பெறும். அது கிட்டத்தட்ட ராக்கெட் தயாரிப்பது போல சிலருக்குக் கடினமாகக் கூட இருக்கலாம்.

ஆனால், கண்களை மிகச் சரியாக அலங்கரிக்காமல், எந்த ஒப்பனையும் நிறைவு பெறாது. அது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமல்ல, மிக எளிமையாக 6 வழிகளை சரியாகக் கையாண்டாலே போதுமானது. உங்கள் மேக்கப் முடிந்ததும் கண்கள் மீன்கள் போல துள்ளும்.

கண் ஷேடோ பயன்படுத்தும் முறை
பொதுவாக அடர்த்தியான நிறத்தைப் பயன்படுத்தினால், அந்த இடம் சிறிதாகத் தெரியும். வெளிர் நிறத்தைப் பயன்படுத்தும் போது அந்த இடம் பெரிதாக இருப்பதைப் போல தோன்றும். எனவேதான், ஒப்பனைக் கலைஞர்கள் பரவலாக அடர் மற்றும் வெளிர் நிற ஷேடோக்களைக் கொண்டு ஒரு வர்ணஜாலம் காட்டுவார்கள்.

அவர்கள் செய்யும் போது கவனித்ததில் தெரிந்தது என்னவென்றால், வெளிர் நிற ஷேடோவை கண்ணின் ஆரம்ப நுனிப் பகுதியில் அல்லது நடுப்பகுதியில் போடுவதும், அடர் நிற ஷேடோவை கண்ணின் இறுதி மற்றும் வெளிப்புறப்பகுதிக்கு பயன்படுத்துவம் மிக அழகாக அமையும். இதனால், கண்கள் நுனிப் பகுதி குறுகியும், பிறகு அது விரிந்தும் காட்சியளிக்கும்.

கண்ணுக்கு மை அழகு
நீங்கள் வைக்கும் கண்மை உங்களுக்கு மிக சிறப்பாகக் காட்சியளிக்க வேண்டுமா? அப்போது அதனை மிகவும் பளீச்சென்று போடாதீர்கள். முதலில் கீழ் இமையின் உள்பகுதியில் மிக மெல்லியைக் கோடிடுங்கள். அதன்பிறகு அடர் பிரவுன் அல்லது கிரே நிற ஷேடோக்களை கண் மை முடியும் இடத்திலிருந்து தொடங்கி மேற்கொண்டு போடுங்கள். இது புன்னகைப்பூவே என்று உங்களைப் பார்த்து பாட வைக்கும்.

அவசர அவசரமாக கிளம்பும் போது..
மிக அவசரம். கிளம்பியே ஆக வேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லையா. கவலை வேண்டாம். ஐ ஷேடோவை உங்கள் விரல் நுனியால் எடுத்து கண் இமைக்கு மேலே பயன்படுத்துங்கள். இதுபோன்ற நேரத்தில் மெட்டாலிக் பெய்ஜ், ரோஸ் கோல்டு போன்ற நிறங்கள் உங்கள் தேர்வாக இருப்பது சிறப்பு. அவ்வளவுதான்.. 

இயற்கையாகவே அழகாக இருப்பதைப் போல தோன்றவேண்டுமா
வழக்கமாக, கண் என்றதுமே கீழ் இமைதான் மிகவும் முக்கியமாக கவனிப்போம். அதன்பிறகுதானே மேல் இமைக்குச் செல்லுவோம். ஆனால் பல ஹாலிவுட் பாலிவுட் நடிகைகளைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் கீழ் இமையை விட மேல் இமையில் கண் இமையின் உள்பாகத்தில் மிக அழகான டைட்லைனை வரைந்து ரம்மியமான தோற்றுத்தை உருவாக்குவார்கள். 

வெள்ளை நிற வாட்டர்லைன்
உங்கள் கண்கள் சிறியதாகவோ உறக்கம் இல்லாமல் சோர்வாகவோ காணப்பட்டால், வெள்ளை நிற வெள்ளை அல்லது வெளிர் அல்லது வெளிர் சிவப்பு (பிங்க்) நிற ஐலைனரை வாட்டர் லைனாக அதாவது கண்ணின் கீழ் இமையின் உள்பாகத்தில் வரையலாம். இதனால், உங்கள் கண்கள் பளீச்சென்றும் இருக்கும். பெரியதாகவும் தெரியும்.

கடைசியாக ஒரு சிறந்த டிப்ஸ் உங்களுக்காக காத்திருக்கிறது.

கண்களை எந்த அளவுக்கு அழகுபடுத்த நினைக்கிறோமோ அந்த அளவுக்கு அதனை பராமரிப்பதும் அவசியம். அதிகப்படியான தண்ணீர் குடிப்பது, உரிய நேரத்தில் உறங்குவது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது கண் பராமரிப்புக்கு முக்கியமாகும். சொல்ல மறந்துவிட்டோமே.. மனதை லேசாக வைத்துக் கொண்டு மனம் திறந்து சிரிக்கும் போது கண்கள் உண்மையிலேயே மிளரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com