குழந்தையைப் பராமரிக்க தாய்மார்கள் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா?

குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதிலும் தந்தையைவிட தாய்க்கு பொறுப்புகள் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. 
குழந்தையைப் பராமரிக்க தாய்மார்கள் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா?

குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதிலும் தந்தையைவிட தாய்க்கு பொறுப்புகள் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. 

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கல்வி கற்பது மட்டுமின்றி தங்களுக்கான கனவை நிறைவேற்ற மிகவும் மெனக்கெடுகிறார்கள். அதேநேரத்தில் தங்கள் குடும்பத்தையும் பொறுப்புடன் கவனித்துக்கொள்கின்றனர். அதில் இந்த 'குழந்தை வளர்ப்பு' என்பது இன்றைய சூழ்நிலையில் பெரும் சவாலாகவே இருக்கிறது. 

பிறந்த குழந்தை எனில் குழந்தைக்கு பாலூட்டுவது முதல் குழந்தையை தூங்க வைப்பது வரை பல வேலைகள் இருக்கின்றன. குழந்தையை பராமரிக்க வேலையை விட்டுவிடும் பெண்களும் அதிகம். 

பிறந்த குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதோ, தூங்கவோ முடியவில்லை என்று கூறும் தாய்மார்கள் அதிகம். 

இந்த சூழ்நிலையில், குழந்தை வளர்ப்பு குறித்த ஓர் ஆய்வில், தாய்மார்கள் ஒரு வாரத்திற்கு சராசரியாக 98 மணி நேரம் வேலை செய்வதாகவும் இது 2.5 முழு நேர வேலைகளைச் செய்வதற்கு சமம் என்றும் கூறப்பட்டுள்ளது.  

5 முதல் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளைக் கொண்டிருந்த 2,000 அமெரிக்கத் தாய்மார்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு அம்மா தன் குழந்தையை கவனித்துக்கொள்வதற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 14 மணி நேரம் செலவழிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சராசரியாக காலை 6:23 மணிக்குத் தொடங்கி இரவு 8:31 மணி வரை குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இடைவெளியில்லாமல் தொடர்ந்து வேலை செய்வதாக பத்தில் நான்கு பேர் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க தொழிலாளர் துறையின் கூற்றுப்படி, 18 வயதிற்குள்பட்ட குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களில் 70% பேர் அலுவலக வேலைக்குச் செல்வதாகவும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு குறித்து இந்த ஆய்வில் குறிப்பிடப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com