வெள்ளை தாடி கருப்பாக மாற வேண்டுமா? இதைச் செய்தாலே போதும்!

நரை முடியைப் போன்று ஆண்களுக்கு வெள்ளைத் தாடி என்பது இப்போது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.
வெள்ளை தாடி கருப்பாக மாற வேண்டுமா? இதைச் செய்தாலே போதும்!

நரை முடியைப் போன்று ஆண்களுக்கு வெள்ளைத் தாடி என்பது இப்போது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இளம் வயதிலேயே தாடியில் வெள்ளை முடிகள் வருவதாக வருத்தப்படும் ஆண்கள் அதிகம். 

வெள்ளை தாடி, ஏன்?

♦ உடலில் மெலனின் நிறமி குறைவதால்தான் வெள்ளை தாடி வருகிறது. மேலும் ஊட்டச்சத்து குறைவினாலும் இது ஏற்படலாம். தற்போது மாறி வரும் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று எனலாம். 

♦ மதுப் பழக்கம் மற்றும் புகைப்பதும் மிக முக்கிய காரணம். 

♦ மன அழுத்தம் அதிகரிப்பது, ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தவிர்ப்பதாலும் வெள்ளை தாடி வரலாம். 

♦ வெள்ளை தாடியை சரிசெய்ய இயற்கையாகவே பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. 

குறிப்புகள் 

♦ ஒரு வாணலியில் 50 மிலி தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதில் 2 ஸ்பூன் நெல்லிப்பொடி போட்டு மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். பின்னர் இதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்து தினமும் 5 நிமிடம் தாடியில் மசாஜ் செய்துவர ஒரு மாதத்தில் மாற்றம் தெரியும். நெல்லிக்காயில் ஆன்டி - ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. 

♦ நெல்லிப்பொடிக்கு பதிலாக தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு காய்ச்சி எடுத்தும் பயன்படுத்தலாம். இரண்டுமே முடியை ஆரோக்கியமாகவும் கருமையாக்கவும் பயன்படும். ஏனெனில் இது மெலனின் நிறமி சுரக்க உதவும். 

♦ அதுபோல, சில துளிகள் எலுமிச்சைச் சாறுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாகக் கலக்கிய பின்னர் அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலக்கி தாடியில் தடவி வரலாம். 

♦ எலுமிச்சைச் சாறுடன் நெல்லிக்காய் பொடி சேர்ந்த கலவையை தாடி முழுவதும் தடவி லேசாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 

♦ ஹென்னா எனும் மருதாணி பவுடர் மற்றும் நெல்லிக்காய் பொடி கலவையையும் தொடர்ந்து அப்ளை செய்துவர விரைவில் மாற்றத்தைக் காணலாம். 

♦ வெறும் தேங்காய் எண்ணெய்யை தினமும் 5 நிமிடங்கள் தாடியில் மசாஜ் செய்துவருவதும் போதுமானது. 

♦ இதுதவிர உடனடியாக வெள்ளைத் தாடியை கருமையாக்க, நீங்களே வீட்டிலேயே ஒரு 'டை' தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் வாசலின்,  ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து முதலில் நன்றாகக் கலக்கிய பின்னர் ஒரு ஸ்பூன் அடுப்பு கரித்தூள் சேர்த்து கலக்கி தாடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு இருமுறை செய்தால் உங்கள் தாடி கருமையாகவே இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com