தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடுகிறதா கரோனா தடுப்பூசி?

கரோனா தடுப்பூசி தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடுவதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 
தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடுகிறதா கரோனா தடுப்பூசி?

கரோனா தடுப்பூசி தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடும் என சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 

ஒரேகான் ஸ்டேட் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் பார்மசியின் மேற்கொண்ட ஆய்வில் கரோனா தடுப்பூசியை தோலில் ஒரு முக்கிய புரதத்தின் உற்பத்தியைத் தூண்டுவதனால் தோல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் என தெரிய வந்துள்ளது. 

'ஜர்னல் ஆஃப் இன்வெஸ்டிகேட் டெர்மட்டாலஜி' என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

'சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது, இது மெலனோமா போன்ற தோல் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. 

இந்நிலையில் கரோனாவுக்கு எதிரான மாடர்னா மற்றும் ஃபைசர் போன்ற எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள் தோல் செல்களில் டிஆர்1 என்ற புரதத்தின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது புற ஊதாக் கதிர்களினால் ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் பிற தோல் பிரச்சனைகளின் அபாயத்தைத் தணிக்கும்' என்று இதன் ஆய்வாளர் அருப் இந்திரா தெரிவித்தார்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, தோல் புற்றுநோயானது அமெரிக்காவில் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். மெலனோமா, தோல் புற்றுநோயின் மிகவும் ஆபத்தான வகை, இது மெலனோசைட்டுகள் எனப்படும் தோல் செல்களில் வீரியம் மிக்க செல்கள் உருவாகும் நிலையாகும். உடலில், மெலனோசைட்டுகள் மெலனின் நிறமியை உற்பத்தி செய்கின்றன, இதுவே தோலின் நிறத்தை தீர்மானிக்கிறது.

தோல் புற்றுநோய்க்கு பெரும்பாலான காரணம் புறஊதாக் கதிர்கள். இவை தோலில் மெலனின் உற்பத்தியைக் குறைத்து புற்றுநோய் ஏற்பட வழிவகுக்குகின்றன. 

'எம்.ஆர்.என்.ஏ.(Messenger RNA) தடுப்பூசிகள் தோலில் உள்ள TR1 எனும் புரத செல்கள் உருவாவதைத் தூண்டுகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதால் மெலோனின் உற்பத்திக்கு வழிவகுக்குகிறது.

எனவே, கோடைக் காலத்தில் வெயிலில் நின்று வேலை செய்பவர்கள், தோல் புற்றுநோயின் அபாயம் உள்ளவர்கள், வருடத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போடுவது நல்லது' என்று கூறிய ஆய்வாளர் அருப் இந்திரா, 'தோல் புற்றுநோய்க்கு எதிராக இந்தியாவில் ஒரு எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி உருவாக்கப்பட்டு பொது பயன்பாட்டில் இருக்க வேண்டும்' என்றும் கூறினார். 

எம்.ஆர்.என்.ஏ.(Messenger RNA) தடுப்பூசிகள் உடலில் டி.என்.ஏ அல்லது உட்கருவில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் உடலில் புரதத்தை உற்பத்தி செய்து நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com