அடிக்கடி தலைவலியா? இந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்!

தலைவலி.... உடல் சார்ந்த தொந்தரவுகளில் அதிகம் ஏற்படும் ஒரு பிரச்னை. மன அழுத்தம், உணவுகளில் மாறுபாடு, தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களினால் தலைவலி ஏற்படுகிறது.
அடிக்கடி தலைவலியா? இந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்!
Published on
Updated on
1 min read

தலைவலி.... உடல் சார்ந்த தொந்தரவுகளில் அதிகம் ஏற்படும் ஒரு பிரச்னை. தலைவலி வந்தாலே ஒருவேளையும் ஓடாது. மன அழுத்தம், உணவுகளில் மாறுபாடு, தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களினால் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு ஏன் தலைவலி வருகிறது என்று கூட கண்டறிய முடியாது. 

இந்த தலைவலிக்கு உணவுகள் கூட காரணமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது சில உணவுகளைச் சாப்பிட்டால் தலைவலி ஏற்படும். 

என்னென்ன உணவுகள்? பார்க்கலாம்!

♦ சீஸ் அதிகம் சாப்பிட்டால் தலைவலி ஏற்படும்.  தைரமைன் ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து தலைவலியை ஏற்படுத்துகிறது. 

♦ ரெட் ஒயின் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தலாம். அதிகம் எடுத்துக்கொண்டால் தலைவலி ஏற்பட வாய்ப்பு அதிகம். 

♦ சாக்லெட்டிலும் தைரமைன் இருப்பதால் அதிகம் சாப்பிட்டால் தலைவலிக்கு ஆளாகலாம். 

♦ செயற்கையாக தயாரிக்கப்பட்ட இனிப்பு மாத்திரைகளை சாப்பிட்டால் தலைவலி வரும். 

♦ உங்களுக்கு பால் வாசனை பிடிக்கவில்லை எனும் பட்சத்தில் பால் குடித்தால் தலைவலி ஏற்படும். பொதுவாக ஒவ்வாத வாசனைகள் அடங்கிய உணவுப் பொருள்களை உட்கொண்டால் தலைவலி ஏற்படும். 

♦ அதுபோல சிலருக்கு எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தலைவலி ஏற்படும். அதில் உள்ள ஆக்டோபமைன் தலைவலியை ஏற்படுத்தும். 

♦ அதுபோல சிலருக்கு தயிர், நிலக்கடலை ஆகியவையும் தலைவலியை உண்டாக்கலாம். 

♦ எனவே, தலைவலி அடிக்கடி ஏற்பட்டால் இந்த உணவுகளைத் தவிர்த்துப் பார்க்கலாம். தொடர்ச்சியாக தலைவலி ஏற்படும்பட்சத்தில் மருத்துவரிடம் பரிசோதனை செய்வது அவசியம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.