சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

உடல் எடையை குறைக்க உதவும் சித்தரத்தை: ஆராய்ச்சியில் தகவல்!

உடல் எடையை குறைக்க  சித்தரத்தை உதவுவதாக ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 12:45 pm

DIN

உடல் எடையை குறைக்க  சித்தரத்தை உதவுவதாக ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சித்தரத்தையின் தாவரவியல் பெயர் அல்பினியா அஃபிசினாரம். இது ஒரு முக்கியமான மூலிகையாகும். மேலும் இந்த தாவரத்தின் வேர்த்தண்டுக் கிழங்கை வீட்டு வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்துகிறோம். தாய்லாந்து உணவு வகைகளில், உணவுக்கு நறுமணம் சேர்க்க  சித்தரத்தயை  பயன்படுத்துகிறார்கள். 

* சித்தரத்தையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. சித்தரத்தையின் மற்றொரு முக்கியமான பயன்பாடு இது புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது. இது புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. 

* சித்தரத்தையின் மற்றொரு சுவாரசியமான பயன் என்னவென்றால், பசியை அடக்கும் திறன், எடைக் குறைப்புக்கு உதவுகிறது. இந்த பயன்பாடும் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

* சித்தரத்தை  வலியைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது. அனைத்து வகையான வீக்கங்களுக்கும் குணமடைய இது உதவுகிறது. 

* சித்தரத்தையின் மற்றொரு முக்கியமான மருத்துவப் பயன்பாடானது, தொண்டைப்புண், இருமல் மற்றும் நெஞ்சு சளி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டது. 

உலர்ந்த வேரின் சித்தரத்தை கஷாயத்தை எடுத்துக் கொள்ளும்போது, ​​​​மேலே கூறப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கஷாயம் குழந்தைகளின் பசியை மேம்படுத்துகிறது மற்றும் அஜீரணத்திற்கு சிகிச்சையளிக்கிறது. 

சித்தரத்தையை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு உடல் பிரச்னைக்கு தகுந்தார்போல் பயன்படுத்திக் கொள்ளாலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.