தாத்தா-பாட்டியுடன் பேரக் குழந்தைகள் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பெற்றோரிடம் இருப்பதை விடவும், தாத்தா பாட்டியுடன் குழந்தைகள் பொதுவாகவே அமைதியாக, நிம்மதியாக, மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது உண்மை.
தாத்தா-பாட்டியுடன் பேரக் குழந்தைகள் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பெற்றோரிடம் இருப்பதை விடவும், தாத்தா பாட்டியுடன் குழந்தைகள் பொதுவாகவே அமைதியாக, நிம்மதியாக, மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது உண்மை.

பெற்றோர் இதை வேண்டாம், அதை வேண்டாம் என்று சொல்லுவார்கள். கண்டிப்பார்கள். ஆனால் அதையே தாத்தா பாட்டியோ குழந்தைகளுக்கு மனதில் வருத்தம் ஏற்படாத வகையில் எடுத்துச் சொல்லி வேண்டாம் என்பதை புரிய வைப்பார்கள். அல்லது குழந்தைகளை அந்த விஷயம் பாதிக்காத வகையில் கொஞ்சமாகக் கொடுப்பார்கள். ஏனென்றால் அந்த பொறுமை.

ஆனால், பெற்றோருக்கு இந்தப் பொறுமை இருக்காது. எப்படியாகினும், தாத்தா பாட்டியுடன் பேரக் குழந்தைகள் நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியம் என்றும், இருவருக்குமே இது நன்மை பயப்பதாகவும் கூறப்படுகிறது.

தாத்தா - பாட்டிகளும் பேரக் குழந்தைகளுடன் விளையாடும் பொழுதும், நேரத்தை செலவிடும் பொதும், அவர்களது வயது பாதியாகக் குறைகிறதாம்.

பேரக் குழந்தைகளுக்கு இணையாக அவர்களால் விளையாட முடிவதால், பேரக் குழந்தைகளும், அவர்களும் மிகச் சிறந்த அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

பொதுவாக இளம் தலைமுறையை விட, மூத்தவர்கள் பொருளாதாரத்திலும் உணர்வைக் கையாளுவதிலும் அனுபவங்களைப் பெற்றவர்களாக இருப்பார்கள் என்பதால், அவர்களிடமிருந்து பல நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். அதுவும் அவர்கள் தங்களது தாத்தா பாட்டியிடமிருந்து இதனைக் கற்றுக் கொள்கிறார்கள். இதனை பல பல்கலை ஆராய்ச்சிகளும் மெய்ப்பிக்கின்றன.

பெற்றோர் சொல்லிக்கொடுக்காத, சொல்லிக் கொடுக்க முடியாத பல விஷயங்களை பொறுமையுடனும், குழந்தைகளுக்குப் பிடித்த வகையிலும் தாத்தா பாட்டியால் சொல்லிக்கொடுக்க முடிகிறது. அதோடு, அவர்களது பசுமையான நினைவலைகளையும் பேரக்குழந்தைகள் கேட்கும்போது, பல புதிய விஷயங்கள் குழந்தைகளுக்கு நேரடியாகச் சென்று சேருகிறது.

மூத்தவர்களின் பல வாழ்க்கை அனுபவங்கள் லாவகமாக பிள்ளைகளுக்கு கடத்தப்படுகிறது. எனவே, பேரக் குழந்தைகள் அவர்களது தாத்தா -  பாட்டிகளுடன் நேரத்தை செலவிடுவது என்பது நிச்சயம் இரு தரப்புக்குமே சிறந்த பயனளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com