நம்பிக்கையும் உண்மையும்: சிறுநீர் பாதை தொற்று பெண்களுக்கு மட்டும்தான் ஏற்படுமா?

சிறுநீர் பாதை தொற்று பெண்களுக்கு மட்டும்தான் ஏற்படுமா? தொற்று ஏற்பட்டால் தானாக சரியாகிவிடுமா? அனைத்து தொற்றுகளும் அறிகுறிகளைக் கொண்டிருக்குமா? 
நம்பிக்கையும் உண்மையும்: சிறுநீர் பாதை தொற்று பெண்களுக்கு மட்டும்தான் ஏற்படுமா?

சிறுநீர் பாதை தொற்று பெண்களுக்கு மட்டும்தான் ஏற்படுமா? தொற்று ஏற்பட்டால் தானாக சரியாகிவிடுமா? அனைத்து தொற்றுகளும் அறிகுறிகளைக் கொண்டிருக்குமா? 

சிறுநீர் பாதை தொற்று(யூரினரி டிராக்ட் இன்ஃபெக்ஷன்) குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் டாக்டர் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை இயக்குநர் டாக்டர் நடராஜன் கோபாலகிருஷ்ணன். 

பெண்களுக்கு மட்டுமே சிறுநீர் பாதை தொற்று ஏற்படும்? 

இல்லை. எந்த பாலினத்தவருக்கும் எந்த வயதிலும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படலாம். சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரையிலும் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் பாதை நோய்த் தொற்று ஏற்படலாம். 

அனைத்து சிறுநீர் பாதை தொற்றுகளும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும். 

சிலவற்றைத் தவிர பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்றுகள் அறிகுறிகளைக் கொண்டிருக்கும். சிறுநீர் பாதையில் எந்த பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைப் பொருத்து அறிகுறிகள் மாறுபடும். உதாரணமாகி சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை என்று மாறுபடும். சிறுநீர் பாதையில் ஒரு சிறு பகுதியில் தொற்று ஏற்பட்டால் மட்டுமே அறிகுறிகளற்று இருக்கும். இந்த வகைகளில் சிறுநீரில் தொற்று இருக்கும், ஆனால் சிறுநீர் பாதை தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இருக்காது. இவர்களுக்கு சிறுநீர் பாதை தொற்றுக்கான சிகிச்சை வேண்டுமா என்பது விவாதத்திற்குரியதுதான். கர்ப்பிணிகள், நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை உட்கொள்பவர்கள் உள்ளிட்டவர்களை உடனே கண்காணிக்க வேண்டும். மற்றவர்களுக்கு கண்காணித்து பின்னர் சிகிச்சை தரலாம். 

அனைத்து சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

பெரும்பாலாக அனைத்து சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின்(ஆன்டி - பயாட்டிக்ஸ்) மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. பூஞ்சை தொற்றுகளுக்கு மட்டும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

சிறுநீர் பாதை தொற்றுகள் தானாக சரியாகிவிடும்.

சிறுநீர் பாதை தொற்றுகள் தானாக சரியாகிவிடாது. சிலருக்கு வேண்டுமானால் ஆகலாம். ஆனால், ஆன்டி - பயாட்டிக் மருந்துகள் மூலமாக சிகிச்சை தர வேண்டும்.

சிறுநீர் பாதை தொற்று உடலுறவு மூலமாகப் பரவும். 

இல்லை. சிறுநீர் பாதை தொற்று உடலுறவு மூலமாகப் பரவாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com