கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

காஃபி குடிப்பதை நிறுத்திவிட்டால்... இவ்வளவு நன்மைகளா?

காஃபி குடிப்பது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:38 pm IST

காஃபி குடிப்பது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. காஃபியில் அதிகமுள்ள காஃபினால் புத்துணர்ச்சி கூடும், நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் என்று கூறப்படுகிறது. 

அதேநேரத்தில் காஃபி அதிகம் குடிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும், ஆயுளைக் குறைக்கும் என்று எதிர்மறையாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் காஃபி குடிப்பதால் சருமத்திற்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. 

காஃபி குடிப்பதை சரும பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. 

Story image

காஃபி குடிப்பதை நிறுத்தினால்...

♦ காஃபி ஒரு டையூரிடிக். அது சிறுநீரை அதிகம் வெளியேற்றும், இதனால் உடல் நீரிழப்பு ஏற்படும். சருமத்தை வறண்டு போகச் செய்யும். எனவே, காஃபியை நிறுத்தினால் உடலில் இருக்கும் நீர்ச்சத்து சரும ஆரோக்கியத்திற்கு உதவும். 

♦ காஃபி குடிப்பதை நிறுத்தினால் சருமம் சிவந்து போதலைத் தடுக்க முடியும். 

♦ கண்களில் கருவளையங்களைக் குறைக்கும், தூக்கம் மேம்படும். 

♦ சருமத்தில் முகப்பருக்களைக் குறைக்கும். 

♦ இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும். எனவே இளமையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காஃபி குடிப்பதை விட்டுவிடலாம். 

♦ சருமத்தில் அரிப்பு மற்றும் ஒவ்வாமையைத் தடுக்கும். 

♦ சருமத்தில் ஏற்படும் எண்ணெய் உருவாக்கத்தை சமநிலையில் வைத்திருக்கும். 

♦ ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

♦ சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து சருமம் பளபளக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.