மக்கள் அதிகம் கூடும் கடற்கரைகளில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால் விரைவில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களுக்கு இலவச வைஃபை வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகரின் பல இடங்களில் இலவச வைஃபை கம்பங்கள் நடப்பட்டு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், தற்போது அவற்றில் பல செயலிழந்துவிட்டன.
எனவே, அவற்றில் செயல்படுத்தக் கூடிய நிலையில் உள்ள கம்பங்களையும் பயன்படுத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக 120 இடங்களில் புதிய வைஃபை கம்பங்களும் நடப்படவிருக்கின்றன.
இத்திட்டம் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியின் மூலம் செயல்படுத்தப்படும். இணையச் சேவை நிறுவனங்கள் (ISPs) இலவச வை-ஃபை (Wi-Fi) சேவையை வழங்க ஒப்புக்கொண்டுள்ளன, என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், மெரிகா கடற்கரையில் 50 வைஃபை கம்பகங்களும், பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளில் தலா 25ம், நீலாங்கரை, திருவொற்றியூர் கடற்கரையில் தலா 10 வைஃபை கம்பங்களும் நடப்படவிருக்கின்றன. மேலும் சில வைஃபை வசதிகள் பூங்காக்கள், விளையாட்டு அரங்குகளிலும் உருவாக்கப்படவிருக்கின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு சென்னையில் பல இடங்களில் இலவச வைஃபை வசதி உருவாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு
சென்னை பசுமை திட்டத்துக்காக 121 நாற்றங்கால் பண்ணைகள்: மாநகராட்சி தகவல்!
பள்ளி மாணவா்களுக்காக ‘சென்னை அறிவோம்’ ஒரு நாள் சுற்றுலாத் திட்டம் தொடக்கம்
மாநகராட்சியில் விதிமீறியதாக 149 பேருக்கு ரூ.8.22 லட்சம் அபராதம்
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!



