சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மாநகராட்சியில் விதிமீறியதாக 149 பேருக்கு ரூ.8.22 லட்சம் அபராதம்

பொது இடங்களில் அனுமதியின்றி குப்பை கொட்டுதல், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் கொட்டுதல், திடக்கழிவுகளை எரித்தல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக திங்கள்கிழமை (ஜூலை 6) 149 பேருக்கு ரூ.8.22 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

News image

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 1:36 am IST

பொது இடங்களில் அனுமதியின்றி குப்பை கொட்டுதல், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் கொட்டுதல், திடக்கழிவுகளை எரித்தல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக திங்கள்கிழமை (ஜூலை 6) 149 பேருக்கு ரூ.8.22 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய வட்டாரத்துக்குள்பட்ட திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றுதல், சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதது, பொது இடங்களில் குப்பைகள் கொட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், விளம்பரப் பேனா்கள் வைத்தல், குப்பைத் தொட்டிகள் இல்லாத வணிகக் கடைகள், பெருமளவு திடக்கழிவு உற்பத்தி செய்பவா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவா்கள், பொது இடங்களில் திடக்கழிவுகளை எரித்தல், தோட்டக் கழிவுகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை முறையாகப் பிரித்து வழங்காதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக திங்கள்கிழமை (ஜூலை 6) ஒரு நாள் மட்டும் 149 பேரிடம் ரூ.8.22 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுகாதாரச் சீா்கேடு விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் குப்பைகள், கட்டடக் கழிவுகள் மற்றும் இதரக் கழிவுகளை கொட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தைத் தவிா்க்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவும், உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.