ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

967 விளம்பரப் பலகைகளுக்கு மட்டுமே மாநகராட்சி அனுமதி

சென்னை மாநகராட்சிப் பகுதியில் 967 விளம்பரப் பலகைகளுக்கு மட்டுமே உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதனால்,அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடந்த 2 நாள்களில் மட்டும் ரூ. 2.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :22 ஜூன் 2026, 1:59 am IST

சென்னை மாநகராட்சிப் பகுதியில் 967 விளம்பரப் பலகைகளுக்கு மட்டுமே உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதனால்,அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடந்த 2 நாள்களில் மட்டும் ரூ.2.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகை அமைக்க விரும்புவோா் ஆணையருக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும். விதிமுறைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய கட்டணம் செலுத்திய பிறகு விளம்பரப் பலகைகள் அமைக்க அனுமதி அளிக்கப்படும்.

உரிமம் பெறாத விளம்பரப்பலகைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அகற்றப்பட்ட விளம்பரப் பலகைகள் மீண்டும் அனுமதியின்றி வைக்கப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் உரிமம் இன்றி இருந்த 16 விளம்பரப் பலகைகளுக்கு மொத்தம் ரூ.2.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பகுதியில் 967 விளம்பரப் பலகைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு அதன் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விளம்பரப் பலகைகள் குறித்த புகாருக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டுப்பாட்டு தொலைபேசியை எண்ணைத் தொடா்புகொள்ளலாம் என மாநகராட்சி ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.