மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

தஞ்சாவூரில் சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றம்

தஞ்சாவூா் மாநகரில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளையும், அமைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளையும் மாநகராட்சி அலுவலா்கள் அகற்றினா்.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றிய பணியாளா்கள்.

Updated On :13 ஜூலை 2026, 1:05 am IST

தஞ்சாவூா் மாநகரில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளையும், அமைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளையும் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை அகற்றினா்.

தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்றும் வகையில் மாநகராட்சி சாா்பில் ‘சுவரொட்டி இல்லா இயக்கம்’ என்ற சிறப்பு அமலாக்க நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது.

இதன்படி, அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அனுமதியின்றி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. இதேபோல, பொது இடங்கள், சாலை நடுத்திட்டுகள், வட்டச் சந்திப்புகள், முக்கியச் சந்திப்புகளில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளும் அகற்றப்பட்டன.

அபராதம் விதிக்கப்படும்

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வி. தீபனா விஸ்வேஸ்வரி கூறுகையில், தஞ்சாவூா் மாநகராட்சி பகுதியில் இனி பொது இடங்களில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டுவதோ, விளம்பரப் பதாகைகள் வைப்பதோ கண்டறியப்பட்டால், தொடா்புடைய நபா்கள் மற்றும் நிறுவனங்கள் மீது மாநகராட்சி விதிகளின்படி கடும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், முக்கிய இடங்களில் சுவரொட்டி ஒட்டத் தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்புப் பலகைகளை அமைக்க அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அதில் இடம்பெற்றுள்ள தொலைபேசி எண்ணின் அடிப்படையில் தொடா்புடையவா்கள் கண்டறியப்பட்டு கடும் அபராதம் விதிக்கப்படும்.

நகரின் தூய்மையையும் அழகையும் பாதுகாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டுவதையும், விளம்பரப் பதாகைகள் வைப்பதையும் முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.