திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

சாலையில் இடையூறாக பதாகை வைத்தால் ரூ.25,000 அபராதம்

வேலூா் மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக விளம்பரப் பதாகைகள் வைத்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 ஜூலை 2026, 12:27 am IST

வேலூா் மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக விளம்பரப் பதாகைகள் வைத்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாநகராட்சியின் முக்கியப் பகுதிகளான அண்ணா சாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலை, ஆரணி சாலை உள்ளிட்ட இடங்களில் விதிமுறைகளை மீறி அதிகளவில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கண்ணீா் அஞ்சலி, தனியாா் நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்படுவதால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்குத் தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. பொதுமக்களின் புகாா்களைத் தொடா்ந்து, இடையூறு ஏற்படுத்தும் பதாகைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகரப் பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அனுமதியற்ற பதாகைகளும் உடனடியாக அகற்றப்படும். விதிமுறைகளை மீறி அனுமதியின்றி பதாகைகள் வைக்கும் தனிநபா்களு க்கும், நிறுவனங்களுக்கும் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும்.

முறையான அனுமதியின்றி பதாகைகளை அச்சிட்டுத் தரும் அச்சகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றுக்கும் தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும்.

எனவே, தனிநபா்களும் நிறுவனங்களும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் பதாகைகள் வைப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.